கல்விக்கு வித்திட்ட காமராசர்

கல்விக்கு வித்திட்ட கறுப்பு வைரமே
கலைமகளின் சுவிகாரப் புத்திரனே
பட்டித்தொட்டி எங்கும் பாடசாலை வைத்தவனே
பகட்டின்றி பதவியில் பாமரனாய் வாழ்ந்தவனே

கட்டித் தங்கமே கருப்பட்டி வெல்லமே
கம்பீர பனைவுருவே கர்மவீர வீமனே
எளிமையாய் பேச்சு ஏர்பிடித்தோர் வாழ்வே மூச்சு
கூர்மையானப் பார்வை வீச்சு குடிசைகள் எல்லாம் கோபுரமாச்சு

ஏட்டறிவின்றி எட்டாப் புகழ் பெற்றவனே
உழைப்பின் ஊதியத்தை வாழ்ந்துக் கற்றுத் தந்தவனே
பொதுவாழ்விலும் தனிவாழ்விலும் கறைபடாத பவித்திரனே
மரணத்தை வென்று எம் இதயத்தில் வாழ்பவனே

நீ விட்டுச் சென்ற பணிகள் தொடர்ந்திட வேண்டும்
நீ கட்டிக் காத்த கண்ணியம் காப்பாற்றப்பட வேண்டும்
நீ கண்ட கனவு மெய்ப்பட உன்னாட்சி மலர வேண்டும்
அதற்காய்...
நீயே மீண்டும் எம் வம்சம் வந்து பிறந்திட வேண்டும்!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (16-Jul-17, 8:24 pm)
பார்வை : 164

மேலே