காதல்

வீசும் காற்றில்
மெல்ல மெல்ல
ஒய்யாரமாய் மிதந்து
வந்த சிவப்பு பட்டு
மேலாடை வந்து .
அந்த மாமரக் கிளையில்
வந்து பாங்காய் அமர்ந்தது
காற்றில் வந்த
அந்த பெண்ணின் மேலாடையை
கையில் பற்றி
காற்று வந்த திசையை
நோக்கி வேகமாக சென்றேன்
வந்த வேகத்தில் நதியோரம்
வந்தடைந்தேன் அங்கு
மயக்கும் மாலை வேளையில்
மஞ்சள் மணற்பரப்பில்
விரித்திருந்த பட்டு பாய் மேல்
அப்சரஸாய் படுத்திருந்தாள்
கன்னி அவள் கண் மூடி
ஏதோ கனவுலகில் இருப்பவள் போல்
அருகில் சென்று பார்த்தேன்
அந்த என் கையில் இருக்கும்
பட்டு மேலாடைக்கு சொந்தக்காரி
அவள் தான். என்று கண்டுகொண்டேன்;
இது என்ன மாயம்
இப்படி மேலாடை ஒன்று
ஒரு பெண்ணை எனக்கு காட்டியதே
இவள் தானோ என்னவள் என்று
மனதில் நினைத்ததேன்
அவளருகில் சென்று மெல்ல
குரல் கொடுத்தேன் அதற்கு
அவள் மூடிய விழிகள்
மூடியே இருக்க
முகம் சிவக்க
முத்து சிரிப்பு உதிர்த்து
வாய் திறந்து 'மன்னவா
அருகில் வா என்னவா
என் கரங்கள் பற்றிக்கொள்ள
என்னை கட்டி அணைத்து
முத்தம் கொடுத்திட்டு ,
வானத்தில் வானம்பாடியாய்
பறந்து சென்றிடுவோம் வா'
என்றால்............உறக்கத்தில்
இன்னும் கனவுலகில் சஞ்சரித்தே !....
என் மூச்சு காற்று
அவள் மேனியில் பட்டவுடன்
விழித்து கொண்டாள் நங்கை அவள்
எதிரே அவள் மேலாடை பற்றி
நின்ற என்னை 'யார் நீங்கள்'
என்று வினவ,மேலாடை
கதையை சொல்லி நான் நிறுத்த
அதை கையில் வாங்கி அணிந்து
நன்றி எனக்கு கூறினால்
நாணம் அவள் கன்னங்கள்
இரண்டையும் சிவந்திட வைக்க
'மன்னவா என்று என்னை அழைத்தாள்
நீ தானே என் கனவில் சற்று முன்
வந்து மறைந்த அந்த அழகு வாலிபன்'
என் காதலன் நீயே என்றாள்

காற்றில் மிதந்து வந்த மேலாடை
எனக்கு காட்டி கொடுத்தது
என் காதலியை என் நாளைய
வதுவை .............விந்தை ,விந்தை..

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Jul-17, 2:01 pm)
Tanglish : kaadhal
பார்வை : 194

மேலே