விவசாயி

விவசாயின் கண்ணீர்
*******************
வான் மழை நீர்யின்றி
வெடிப்பு விட்ட விலைச்சல்
நிலமே!

எங்கள் கண்ணீர்த் தண்ணீர்
ஆகச் சொட்டியும் உன் மேனிக் குளிரவில்லையா!

பச்சைப் பாசிகள் படர்ந்த உன்னில்
பிள்ளையாகத் தவழ்ந்த மண்ணில்
ஈரமின்றி வீழ்ந்துக் கிடக்கிறேன்~கருகிப்
போன உன் மார்புகள் மீதுக் கண்ணீர் விட்டும் வேர்கள் நனையவில்லையா!

ஆழமாகப் பள்ளம் எடுத்தும்
ஆழ்த்துளைக் கிணறு யிட்டும் ~உன்
தேகத்தின் உள்ளேத் துளி ஈரமில்லையே......

செயற்கை நரம்புகள் புதைக்கப்பட்டு
உதிரங்கள் எல்லாம் உறிஞ்சப்பட்டு
காசுப் பார்த்தக் கூட்டத்தாலே
வீழ்ந்துக் கிடக்கே அணைகள் ~எல்லாம்!

வான் மழையே உதிரம் தந்து
எங்கள் கண்ணீர்த் துடைப்பாயா.........

~ரா-ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ரா-ஸ்ரீராம் ரவிக்குமார் (20-Jul-17, 6:21 am)
Tanglish : vivasaayin vaazhkai
பார்வை : 88

மேலே