என்னடி பேருங்க

அத்தை அமெரிக்காவில இருக்கற உங்க சின்ன மருக செஞ்சிருக்கற வேலயப் பாத்தீங்களா?
😊😊😊😊😊
என்னடி செம்பருத்தி சொல்லற? எனக்கு ஒரே பதட்டமா இருக்குது!
😊😊😊😊😊
அவுளுக்கு போன மாசம் ரட்டைப் பெண் கொழந்தைங்க பொறந்திருக்கிதுல்ல அந்தக் கொழந்தைங்க பேருங்கள பதிவு பண்ணீட்டாங்களாம்.
😊😊😊😊😊😊
என்னடி சொல்லற? எனக்கு தகவலே சொல்லல. சரி, சரி. சொல்லு என்ன பேருங்கள வச்சாங்களாம்.
😊😊😊😊😊
சின்னமாமா, கொழந்தைங்களுக்கு தூய தமிழ்ப் பேரா வைக்க ஆசைப்பட்டாராம் . உங்க சின்ன மருமக அதுக்கு ஒத்துக்கலையாம். தென்னிந்தியா வட இந்தியா ரண்டையும் இணைக்கற மாதிரி பேருங்கள வச்சுட்டலாம்.
😊😊😊😊😊😊
அப்பிடிப்பட்ட பேருங்களும் இருக்குதாடி செந்தாமரை?
😊😊😊😊😊😊
தமிழப் பேருங்களப் பிள்ளைங்களுக்கு ரண்டு சதவீதம் தமிழர்கள்கூட வைக்கறதில்ல. அதனால உங்க சின்ன மருமக வாணி, ஒரு கொழந்தைக்கு 'ஏமி' -ன்னும் இன்னோரு குழந்தைக்கு 'காமி' -ன்னும பேரு வச்சுட்டளாம்
😊😊😊😊😊
என்னது ஏமியா, காமியா? என்னடி பேருங்க இது? 'ஏமி' தெலுங்கு வார்த்தை. அதுக்கு 'என்ன' -ன்னு அர்த்தம். 'காமி' -ன்னா என்னடி?
😊😊😊😊😊😊
'காமி' -ங்கறது இந்திப் பேராம்.
😊😊😊😊
அதுக்கு என்னடி அர்த்தம்?
😊😊😊😊😊
எனக்கென்னங்க அத்தை தெரியும்?
எத்தனை பேரு அர்த்தம் தெரிஞ்ங பிறமொழிப் பேருங்கள அவுங்க பிள்ளைங்களுக்கு வைக்காறாங்க?
😊😊😊😊😊
எல்லாம் சினிமா தொலைக்காட்சி ரசனைடி? கலி முத்திப் போச்சுடி செம்பருத்தி.
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
சிரிக்க அல்ல. சிந்திக்க.
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
Kaami=accomplished, perfect, complete

எழுதியவர் : மலர் (20-Jul-17, 9:40 am)
பார்வை : 211

மேலே