காதல்

இதோ என்னைக் கடந்து போகின்றாளே
தேவதையாய் அவள்தான் என்னவள் என்று
அன்றே நான் முடிவு செய்தேன் என்று அவளை
நான் முதல் முதலில் கண்டேனோ அன்றே
அன்று முதல் இன்றுவரை என் கண்கள்
அவள் மீது பட்டதுண்டு ஆனால் அவள்
பார்வை என் மீது படவே இல்லை -என்றோ
ஒரு நாள் நிச்சயம் அது நடந்துவிடும் அந்த
நாள் வெகு தூரமில்லை என்ற நம்பிக்கையில்
நான் இன்றும் இங்கு .............அதோ அவள் ...
இன்று என்ன அதிசயமாய் திரும்புகிறாள்
திரும்பியவள் பார்வையை நேராக என் மீது
என் கண்களை ஊடுருவ இறக்குகிறாளே
என் கண்கள் கூசுகின்றனவே .......இது
என்ன நான் காண்பது கனவா இல்லை நிஜமா,
கண்ணும் கண்ணும் கலந்த பின்னே
காதலும் கனிந்தது உண்மையே எனினும்
அவளோ தனுக்கு தானே வரைந்த கோட்டை
ஒரு நொடியும் தாண்டவில்லை ............
கண்ணால் பேசினாள் அவளும்
முத்து உதிர்ப்பதோப்ப சில காதல்
மொழிகள் உதிர்த்தாள் என்னை
தன வயம் கட்டிப்போட ......இருப்பினும்
அதற்கு மேல் நான் கிட்ட கிட்ட சென்றாலும்
எப்படியோ நழுவி என் கை விறல் நகங்கள்
கூட அவள் மேல் பட்டுவிடாமல் எட்டி எட்டி
சென்று விடுவாள் ........................

அச்சச்சோ என்ன சொல்வேன், எப்படி சொல்வேன்
அவள் அங்கம்தனை அலங்கரிக்கும் அந்த
ஆடைதான் என்ன கொடுத்துவைத்ததோ
நித்தம் நித்தம் அவளை அள்ளி அணைக்க !

அவள் கருமேக கூந்தலில் மல்லிகைப்பூச் சரம்
வாசம் தருகிறேன் என்று சொல்லியதோ
தெரியவில்லை அவள் கை விரல்கள் அந்த
பூவை தொட்டு தொட்டு சரிபாக்குதே
பூவே பூவே நீ கொடுத்துவைத்தவனா ....

அவள் கைகளில் கொஞ்சும் பல நிறங்கள்
கொண்ட கண்ணாடி வளையல்கள்
அவள் ஸ்பரிசத்தில் சிலு சிலுத்து
குலுங்குகின்றனவோ .......அந்த ஓசை
என் காதுகளில் இன்ப ஓசை சேர்க்குதடி

அவள் கால்களில் கொஞ்சும் சலங்கைகள்
அவள் நடையோடு சேர்ந்து ஸ்வரம் சேர்த்து
லயம் சேர்த்து அவள் நடைக்கு அழகு தந்திட
என் மனம் இன்னும் வேகமாய் அவளை
அடைந்திட எண்ணிட.............

நான் மீண்டும் அவளை இன்று
கிட்ட கிட்ட சென்று உறவாட நினைத்திட
உயிர்க்கொண்டு நடக்கும் அந்த
தாமரையும் பூவை ......காதலில்
வேகம் வேண்டாம் விவேகம் வேண்டும்
பொறுத்திரு அன்பே அதுவரை என்று
நயமாய் இனிதாய் கூறி சென்றுவிட்டாள்

இன்னும் எப்படி பொருப்பேனடி என்னவளே
காலம் நமக்கு காத்திருக்குமோ அறிந்திடுவாய்
நாளை மீண்டும் சந்திக்கையில் உன்னை
தொட்ட இன்பம் எனக்கும் தந்துவிடு கண்ணே
எப்படி அந்த உந்தன் ஆடைக்கும் ,அந்த
நீ சூடிய மல்லிகைப்பூவுக்கும்
கைகள் கண்ணாடி வளைகளுக்கும்,இன்னும்
கால்களில் நீ அணிந்த சலங்கைக்கும் நீ
உன்னை அறியாமலேயே தருகின்றாய்
அது போல ,என் உள்ளம் குளிர ......

இது நான் சொன்ன இந்த காதல் பிதற்றல்
அவள் காதுகளுக்கு எட்டினதோ தெரியாது
நாளை எங்கள் சந்திப்பே இதற்க்கு தீர்ப்பு
இப்போது 'சையனோரா' 'சையனோரா '
என்று கூறி வீடு திரும்பினேன்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (20-Jul-17, 5:26 pm)
Tanglish : kaadhal
பார்வை : 159

மேலே