மன்னித்துவிடு என் உயிரே

மழைத்துளியைபட்டகமாக்கி
ஊடுருவும் வெய்யில்
விரிந்திருக்கும் வானவில்லாய் ,
ஏழு நிறம் மட்டும் ஊருக்குத் தெரியும் ,
கண்ணுக்குத் தெரியாத
வண்ணங்களும் உண்டு ,

வானவில்லாகவே என் உருவம்
ஊரார் கண்களுக்கு
என் அறியாத நிறமெல்லாம் அறிந்து கொண்டவனே ....
எங்கேயிருக்கிறாய் ....?
எப்படியிருக்கிறாய் ....?

பிறப்பு முதலே
விருப்பம் அறிந்து
கேட்காமலே கிடைத்தது எல்லாம் ,
என் வீடு ஒரு சொர்க்கம்
எனக்குத் தேவையெனும் அத்தனையும் அங்கேயே கிடைத்தது ,

ஆனால் ....
உன் வீடு என் கோவில்!
என் மீது அன்பைப் பொழியும் கடவுள் நீ ...
அங்குதானே இருந்தாய் ,

உன்னிடம் அன்பைச் சொல்லி ...
சம்மதம் கிடைத்த போதே ,
உன் மனைவியாகிவிட்டேன் ,

மனதால் ஒருவனை
நினைத்தபொழுதே
கற்பை இழக்கிறாள் கன்னி ...!

உன்னால் கன்னி கழிக்கப்பட்ட ஒரு பெண்ணை
என்ன பெயரிட்டு அழைக்கும் உலகம் ...?
இப்பொழுது தெரிகிதா
எனக்கும் உனக்கும்
என்ன உறவென்று . .?

விளையாட்டாய் ஒரு நாள்
உரையாடிய வார்த்தை
முள்ளாய் உன்னைக் குத்தி
முதுகு வழி வருமென்று
எண்ணியா சொன்னேன் அதை ,

பாவி நான் தான் ...!
அந்த ஒரு வார்த்தை
ஒன்றாகிப் போன உள்ளத்திலிருந்து
வரவேக்கூடாது தான் ,
என்னவெல்லாம் நினைத்தாயோ ?
எப்படி எல்லாம் துடித்தாயோ ?
மன்னித்து விடு ...!

அதற்காக நீ என்னை
வெறுத்து விட்டாயென்று
சாமி வந்து சொன்னாலும்
சத்தியமாய் நம்ப மாட்டேன் ,

என்னடா.. விளையாட்டு ,?
எதற்கிந்த பிரிவு ...?
வானூர்தி ஏறி வளி பயணித்து
இறங்கிவிட்டாயே எங்கேயோ ?

கனவில் உன்னைக்
கட்டித் தழுவி
கொடுத்த முத்தங்கள் கோடியிருக்கும் ,

மூன்று வருடமாய் உன்
முகம் பார்க்க விடாமல்
கொடுத்த தண்டனை போதும் ,

பெண் பார்க்க வந்து
பிடரியில் அடிபட்டு
ஓடிய மாப்பிளைகள் ஏராளம் ,
பருவம் தவறு தென்று
அன்னையும் தந்தையும் அழுதபொழுது
முடியாதென்று கூற முடியவில்லை என்னால் ,
நிச்சயிக்கப்பட்டது என்
தி(ம) ருமணம் ,
அதற்காகவாவது வருவாயா ...என் ஆசை நாயகனே..!

எழுதியவர் : ந.இராஜ்குமார் (20-Jul-17, 10:53 pm)
பார்வை : 968

மேலே