முடிச்சுகள்

மானுட வாழ்க்கையில்
முடிச்சுகள் ஆயிரம்
இறுதி வரையில்
அவிழ்க்க முடியாதவை சில
அவிழ்த்தால் நிம்மதி
அவிழ்த்தால் சோதனை
முடிச்சுகள் அவமானம்
முடிச்சுகள் வெகுமானம்

உலகமே முடிச்சுக்குள்
அடங்கியிருக்கு
வியாபாரத்துக்கும் முடிச்சு
வாழ்க்கைக்கும் முடிச்சு
முடிச்சு ஒரு புரிதல்
முடிச்சு ஒரு ஒப்பந்தம்

தாய்க்கும் சேய்க்கும்
தொப்புள் கொடி முடிச்சு
கனவனுக்கும் மனைவிக்கும் தாலிகொடி முடிச்சு
அண்ணனுக்கும் தங்கைக்கும்
சீர் கொண்டு முடிச்சு...

இன்பத்திலும்
துன்பத்திலும் அவிழாத
முடிச்சு நட்பு
சில துன்பங்களில்
அவிழக்கூடிய முடிச்சு காதல்
அவிழ்ந்த மூன்று முடிச்சுகளை
மறுபடியும் போட்டால் தருமம்...
வாழ்க்கை இனிக்க போடுங்கள்
சிக்கிரமே மூன்று முடிச்சு...

எழுதியவர் : செல்வமுத்து.M (21-Jul-17, 9:57 am)
Tanglish : mudichchugal
பார்வை : 165

மேலே