நீ யாரோ தான் - ஆனால்

[] நீ யாரோ தான் - ஆனால் ..!
----------------------------------------------------------------------------

இல்லையென தெரிந்து
விலக நினைத்தவனை - நீ
இழுத்து பிடிப்பதேனோ..?
விளங்கவில்லை...

உனக்கு நான் -
தொல்லையென எண்ணி
தொலைய நினைந்தேன்..
இன்னும் நீ
தொடர்பில் இருப்பதேனோ..!

உன் பின்னால்
ஓடி திரிந்து மூச்சிரைக்கையில்
உன் கண்ணால்
ஆக்ஸிஐன் தருகிறாயே
அது எதற்கு ..?

நடக்காது என துயருற்று
நஞ்சுண்ணும் என் மனதை
நம்பிக்கை செய்கைகளாலே
விஷம் முறிப்பவளே
விடை இருக்கிறதா வினாக்களுக்கு ..

நிலவை இரசித்து
இரவை கழிக்கிறேன்
நிலவு நீயென்று ..!
நீயும் விழித்து கிடக்கிறாயே
சொல் அது ஏனென்று ..?

நீ எதுவும் சொல்ல வேண்டாம் ..
சொல்லவும் மாட்டாய் ..!

நானே சொல்கிறேன் ..

கவிதையை தொடங்கையில்
நீ யாரோ ..
ஆனால் முடிக்கையில்
நீ என் காதலி ..!


- யாழ் ..

எழுதியவர் : யாழ் கண்ணன் (21-Jul-17, 6:18 pm)
சேர்த்தது : யாழ் கண்ணன்
பார்வை : 150

மேலே