புலம்பல்கள்

பலருடைய வெறுப்புக்கு மத்தியில் தான் நானும் எழுதுகிறேன் ஞானப்புலம்பல்களை...

தாய் கொண்ட அன்பு தவிக்கவிட்டு போனபின்னும்,
தந்தையின் அன்பு சிதை தின்றப் பிறகுமே உயர்ந்ததென உணரவும்,
கவிபாடவும் செய்யும் ஞானிலத்தாரே,
சினிமா நடிகைக்கு ஒன்றென்றால் ஓடிச் செல்வதும் ஏனோ?
வேடமிட்டால், இரண்டு கண்ணீரை சிந்திவிட்டால் வேகமாக இயங்குகிறது இணையம்...

அறிகிறேன் உங்களுடைய அறிவெல்லாம் உடலைப்பற்றியது தானே...
என்னுடன் பழகிய நண்பர்களில் பலர் இவ்விதம் தான் என்பதை அறிந்தாலும் விட்டு விலகிவிடாமல் தாமரை இலைபோலே நானும் வாழ்கிறேன் இம்மண்ணுலகிலே...

கற்சிலைக்கு பூசை செய்து கர்ம பலனை தீர்க்க வேண்டி வெந்து போகும் உடலுக்காக ஓராயிரம் ஆபரணங்கள் வாங்கி அழகென்று அதைப் பூட்டி நடமாடும் நகைக்கடையாய் ஆணும் பெண்ணும் உலா வர இல்லாதவன் வேகுகிறார் அன்றாட உழைப்பில் கிடைக்கும் பணம் அன்றாட பசிக்கே சரியாக உள்ளதே என்று...

வெங்காய அரசியல் சமுதாயத்தைக் கொளுத்திவிட்டு வேடிக்கை பார்க்கிறது இந்தியாவிலே...
சர்வதிகாரம் கொண்டு கெட்ட மதியினரை அடக்கவும் விரைகிறார்கள் நிரந்தரத் தீர்வறியா மடையர்களாய்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (22-Jul-17, 9:30 am)
பார்வை : 634

மேலே