மாயை

இரவு பகலை தேடுவதாயும்
பகல் இரவை தேடுவதாயும்
நமக்கான நம் தேடல்கள்...
என்றுமே ஒன்றோடொன்று
கலந்ததாய் சரித்திரமில்லை...
ஏன்?... சம்பவங்களுமில்லை...
நான் விட்டுச் செல்வதை
நீ தொட்டுச் கொள்வதாயும்...
நீ தொட்டு தொடர்ந்ததை
நான் பற்றிக் கொள்வதாயும்
எங்கோ ஓர் இணைப்பு...
எதிலோ ஓர் ஒற்றுமை...
களையப் போகும் விளிம்பில்
ஒன்று கலப்பதான மாயையை
காலம் நம்மிருவரில்
காட்டிக் பின் கரைகிறது...
ஏமாந்து நிற்கும் தருணங்களே
ஏட்டில் எனக்கு எழுதப்பட்டவை!..
தண்ணீரில் அழும் மீனாய்
கண்ணீரில் கரையும் இதயம்!..

எழுதியவர் : கவிப்_பிரியை_shah (22-Jul-17, 1:22 pm)
Tanglish : maiai
பார்வை : 34

மேலே