பிரியத்தின் துளிகள் - 6

பிரியத்தின் துளிகள்...

துளி #51

நிழலாகப் பின் தொடர்கிறாய்
இருளாகிப் போன வாழ்விலும்...
நினைவாக உடன் வருகிறாய்
நிகழ்காலம் மறந்த உணர்விலும்...

துளி #52

காதல் வரலாறெழுத
கவிகள் புனைகிறேன்...
வரலாறு முழுவதிலும்
வரிகளை நீயே ஆள்கிறாய்!..

துளி #53

நிழல் போல் நீ என்னில்...
எந்தன் அருகிருந்தாலும்
அடியெடுத்து வைக்கையில் நான்
படிப்படியாய் நகர்கிறாய் நீ..!

துளி #54

மொழிக்கு முதலிலும் வந்து
இடையிலும் நின்று
ஈற்றிலும் தொடர்ந்தாய்...
என் தமிழெல்லாம் நிறைந்தாய்!..


துளி #55

குறைந்தபட்ச அன்பாவது
கொடுத்துச் செல்..!
அகால மரணம்
இந்த அபலைக்கு
மறுக்கப்படட்டுமே!..

துளி #56

உளி கொண்டு
செதுக்கப்படும் சிலையாய்
உன் விழி கொண்டு
செதுக்கப்படுகிறேன் நான்...
சிலைக்கு உயிர் நல்க
சிற்பி தான் தோற்பினும்
எனக்கு உயிர் நல்கி
உயர் சாதனை புரியும்
உன் விழிகள்!..

துளி #57

தரை வான்
கடல் காற்று
யாவுமானாய்
எந்தன் உலகில் !..

துளி #58

தேடல் கொண்ட விழியில்
தேய் பிறை காட்டுகிறாய்...
வாடும் எந்தன் உயிர் பயிர்க்கு
பார்வை மழை மறுக்கின்றாய்!..

துளி #59

சத்தமின்றி
நித்தமுன் முத்தத்தை
சித்தம் பித்தனாக
ஒத்திகைபார்க்க
மொத்தம்மறந்தேன்!!!

துளி #60

உன் மௌனம் தாக்கியதில்
என் மொழிகள் முடமாகி...
நீ விழிகள் மறைத்ததில்
என் வழிகள் இருளாகி...
உன்னைக் காணாத நாட்கள்
நீளும் பாலைவனம் போன்றே...
நீ இன்றிய வாழ்வில் - நான்
இருந்தும் இறந்தவள் போன்றே..!

எழுதியவர் : கவிப்_பிரியை_shah (22-Jul-17, 2:33 pm)
பார்வை : 89

மேலே