அப்பா

அப்பா ...
அம்மாவிற்கும் உனக்கும் உள்ள வித்தியாசம்
பத்து மாதம் அம்மா என்னை மிகையாக கருப்பையில் சுமந்தார்கள்....
நீ அன்றிலிருந்தே அன்னையோடு என்னை நெஞ்சில் சுமக்கிறாய் ...
உங்களால் என்னை என்றும் சுமக்க முடியும் அறிவேன் அப்பா நான் ...

உன்னுடைய மார்பு கூட்டில் உறங்கும் பொழுது
உன் உடல் வலி எல்லாம் எங்கே அப்பா போனது ...

என்னுடைய முதல் வெற்றிக்கு விதை இட்டது அப்பா ...
என்னுடைய வெற்றிக்கு மனம் நெகிழ்ந்தது அப்பா ...
என்னுடைய உலகம் பிறந்தது அப்பாவின் அசைவில் ...

உலகை சொல்லி தந்தது அப்பா...
வாழ்க்கை என்பதை வாழ்ந்து காட்டுவது அப்பா ...
அறிவை வளர்த்தது அப்பா ...
ஏணிப்படி அப்பா ...
உண்மையை உரக்க சொன்னது அப்பா ...
இலக்கியங்களை சிறு வயதில் இருந்து இன்றைக்கும் சொல்லித் தருவது அப்பா ...
இசையை ஊட்டியது அப்பா ...
தெருக்கூத்தை என்னுள் ரசிக்க வைத்தது அப்பா ...
அகமும் புறமும் சமமாய் இருக்கும் ...
முகமூடி என்றைக்கும் எனக்கு தேவை இல்லை ...
நான் எப்பொழுதும் உன் பிள்ளை ...
உன் பெயரை என் உயிர் உள்ளவரை காப்பேன் ...
நம் குடும்பப்பெருமையையும் ,குலப்பெருமையையும் என்றும் பாதுகாப்பேன் ...
நம் குலசாமிக்கு உண்மையாக இருப்பேன் ...எங்கே சென்றாலும் ...
அப்பா ... உங்கள் மகள் பிரபாவதி வீரமுத்து

---------------------------------------------------
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை ...
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை ...
-----------------------------------------------------

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (22-Jul-17, 3:54 pm)
Tanglish : appa
பார்வை : 1094

மேலே