இப்படியும் ஒரு காதல் வலி

'நீ தான் என் உயிர்' என்றாய்
அன்று உன்னுடன் நான்
பழகிய முதல் நாள்

இன்றோ நீயே கூறுகிறாய்
'இப்படி ஏன் என் உயிரை
வாங்குகின்றாய் பிசாசே;
என்று கூறி வைகிறாய்

அன்று நீ காதலன் நான்
உந்தன் காதலி

இன்று நான் உன் மனைவி
நீ என் மணாளன்!

அன்று 'நீ தானே என்
காதல் தேவதை; என்றாய்
கன்னி தெய்வமே என்றாய்
என் வாழ்வை விளங்கவைக்க
வந்த ஸ்ரீ தேவி என்றாய்

இன்று அதே நீ தான்
என்னை 'மூதேவியே
போய்த் தொலை என்கிறாய்

அன்று நாம் காதலர்
இன்றோ கணவன்-மனைவி !

அப்படி நான் என்னதான்
தவறு செய்தேன் பாவம் செய்தேன்
இப்படி நீ என் மேல் கசந்திட
ஓ இப்போது அறிந்து விட்டேன்
நீ இப்படி வசை மொழி என் மேல்
தொடுத்துவிடுவது ஏன் என்று

குடிப்பழக்கம் உன்னை இப்போது
வெகுவாய் தாக்கிவிட்டது
அதை நான் நயம்பட கூறி
உன்னை திருத்த முயற்சி செய்கின்றேன்
இதில் உனக்கு சம்மதம் இல்லை போலும்

அன்று நீ காதலன் இந்த பழக்கம்
ஏதும் இல்லாதவன் .............
இப்போது மாறிவிட்டாய் உன்
போக்கும் சரி இல்லை
இதை தட்டி கேட்டல் உன்
உன் நலம் கருத்தில் கொண்டு
என்னை நீ வெறுக்கின்றாய்

எனக்கு நம்பிக்கை உண்டு
நீ என்னை திட்டினாலும் சரி
அடித்தாலும் சரி ஒரு போதும்
உன்னை குடிக்கு அடிமை
ஆக்க விட மாட்டேன்
இதில் எத்தனை துயரங்கள்
நான் சந்திக்க நேர்ந்தாலும்
அவற்றை காதல் வலிகள் என்றே
ஏற்றுக்கொள்வேன்

என்னவனே இந்த குடி பழக்கம்
உனக்கெதற்கு அதை விட்டுவிடு
மீண்டும் எந்தன் இனிய காதலனாய்
உன் இந்த காதலியை இனிய மனைவியை
வாழவிடு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-Jul-17, 7:12 pm)
பார்வை : 145

மேலே