குறிப்பேடு சொன்னது

"நாளோடு மாதங்கள்
நம்மை பற்றிய தகவல் ,நாள்நடப்பை
அதில் எழுத சிறியதொரு பகுதி "என
எளிதாய் குறிப்பேட்டை நினைத்திருந்தேன் நானும்
முன்பேல்லாம் அதை நானுமெழுதுவது உண்டு
ஏனோ இடையிலதை கைவிட்டாச்சு
பின் காலமுருண்டோடி வருடம் ஒன்பதுமாச்சு
இடையில் என் நிலையும் பன்மடங்கு உயர்ந்து போச்சு
அன்றோரு நாள் சாலையிலே கிழுவரோருவர்
தள்ளாமை மிகுதியினால் தவித்து நின்றார்
எங்கோ பார்த்தது போல் நினைவிருக்கு
எனக்கோ வேலை பல காத்திருக்கு
அன்றிரவு என் வீட்டின் பரண்மீது
ஏதோ தேடுகையில் ஒரு குறிப்பேடு
என் பழைய குறிப்பேடு!அதன் பக்கங்கள் தனை புரட்ட
நானனதிர்ந்து போனேன்!
அக்கிழவரே எனக்கு தொழில் கொடுத்தார்
வாழ்க்கையில் முன்னேற வழிவகுத்தார்
அய்யகோ அந்த குறிப்பேடு
" ஏய் மனித மனமே நீ உன் நிலைமை மறந்து விடுவாய்
உனக்கு ஏணியாயிருந்தவரை எல்லாம்
நான் ஏடுகளாய் சுமக்கின்றேன் ஏனை புரட்டியாவது
பழைமையை நினைத்து பார்"என்றது

எழுதியவர் : வெ மா (22-Jul-17, 10:47 pm)
பார்வை : 61

மேலே