மரங்களை ,நீர்தேக்கங்களை காப்போம்

இயர்கையை புரிந்துகொள்வோம் *
--------------------------------------------------------
மாமன்னர்களும் சிற்றரசர்களும்
நம் நாட்டில் அந்நாளில்
நன்மைபயக்கும் மரங்கள் பல
சாலைகள் ஓரம் நட்டுவைத்ததல்லாமல்
அவைகள் நிழல் தரும் மரங்களை
வளர்ந்து வான் நோக்கி நிமிர்ந்து
பூ தந்து காய் தந்து கனிகளும் தந்து
வழிபோக்கர்க்கு அறிய நிழல் தரும்
மரங்களாய் இருந்திட பராமரித்தனர்
'ஓரறிவு உயிர்கள் இவை'என்று இவற்றை
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் முன்பே
மரங்களின் தனித்துவத்தை நம் மக்கள்
அறிந்திருந்தனர் அதற்கேற்று அவற்றை
நேசித்து போற்றி பராமரித்து வந்தனர்
ஒவ்வோர் கும்பிடும் தெய்வத்திற்கும்
கோயில்களில் தனி தல விருட்சங்கள் உண்டு
ஒவ்வொரு வேந்தனுக்கு கோடி மரமும் உண்டு

இப்படி மருத்துவம் வளர்த்த மன்னர்கள்
நீறில்லாது வாழ்வில்லை என்பதை
நன்கு உணர்ந்து ஏரிகள்,குளங்கள் என்று
நீர்த்தேக்கங்கள் வெட்டி வைத்தனர்
அவற்றை கண்போல் பராமரித்தும் வந்தனர்
மக்களும் பயன் பெற்று இன்புற்று வாழ்ந்தனர்

போயின அந்த பழைய மனிதாபிமானம் கொண்ட
நாடும் மக்களும் ஆண்ட மாமன்னர்களும்
இன்று நாம் காணும் மக்கள் மனிதரையே
புல் பூண்டுபோல் எண்ணி வெட்டி வீழ்த்துகின்றார்
மரங்களை, வீதியில் மரங்களை ,காடுகளில் மரங்களை
வெட்டி வீழ்த்த தயங்குவதே இல்லை இடம் தேடி பிடிக்க
அதில் மனை கட்டி வியாபாரம் நடத்த மரங்கள்
பாவம் கண்ணீர் விடுகின்றன !
சிற்றாறுகள்,ஓடைகள் பலவற்றை தேடி அவை
சேரும் இடம் தேடி குளம்,ஏரிகள் வெட்டி அமைத்த
அந்நாள் இவைகள் எல்லாம் இந்நாளில்
துள்ளடைக்கப்பட்டு அங்கு அடுக்குமாடி கட்டிடங்கள்
பட்டணத்தின் எல்லைகள் விஸ்தரிக்க வந்து விட்டன

இப்படி மரங்களையும் தண்ணீர் தேக்கங்களையும்
அழித்திடும் மக்கள் அறிவிலிகள் -இந்த இவர்கள்
அழிவுச்செய்கை ஒரு நாள் இவர்களையே அல்லவா
அழித்துவிடும்-அப்படித்தான் இன்று நடந்து
கொண்டிருக்கிறது
இயற்கை அன்னை பார்த்து சிரிக்கிறாள்
அது கொற்கையின் சிரிப்பு மனிதனே
புரிந்துகொள், ஜாக்கிரதை!
இயற்கையுடன் ஒன்றி வாழ கற்றுக்கொள்
வாழ்ந்திடலாம் இல்லாவிடில் அழிவே மிச்சம்
இது திண்ணம் !

( * பின் குறிப்பு : இன்று எழுத்து நண்பர் ஆவுடையப்பன்
வேலாயுதம் அவர்கள் வெளியிட்ட புறநானூற்று
காலம் முதல் சமீப காலம் வரை மரங்களை வளர்த்து
பராமரித்த நம்மவர் இப்போது அவற்றை அழிப்பதில்
ஆர்வம் காட்டுவதில் அவலம் என்னை உலுக்கியது
அதன் விளைவால் எழுந்த கவிதை இது;இதன் மதிப்பு
நண்பர் ஆவுடையப்பன் வேலாயுதம் அவர்களை
சாரும்)

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Jul-17, 2:08 pm)
பார்வை : 449

மேலே