ஆயிரம் கேள்விகள் ஒரே பதில்

வானம் திரை
சிறகுத் தூரிகைகள்
காற்றில் கரைந்த
ஒவியங்கள் யார்வசம் ?

எறும்புகளின் தேசம்
உணவுக்கான பயணங்கள்
பாதைகளின் வரைபடத்தை
வரைந்தது யார்விரல்?

பலகோடி உயிர்கள்
விதவிதமாய் குரல்கள்
அத்தனை அர்த்தங்கள்
கொண்டது யார்மொழி ?

எண்ணிக்கை யற்றவை
கோள்கள் விண்மீன்கள்
எந்தக் கணினிக்குள்
அடங்கும் அம்முகவரி ?

@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (23-Jul-17, 6:40 pm)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 302

மேலே