தாய்

என் பசியறிவாள்

என் ருசியறிவாள்

என் பிணியறிவாள்

என் பயமறிவாள்

என் தைரியமறிவாள்

என் நட்பறிவாள்

என்னை பற்றி

யாதுமறிந்தவளைப்

பற்றி யாதுமறியாது

போனேன் என் தாய்

என்பதைத் தவிர

யாரிடம் கேட்பேன்

அவளைப் பற்றி

அவளில்லா இத்தருணத்தில்

மீண்டுமொரு வாய்ப்பு

கேட்கதவிக்குது மனது

மீண்டுமவள் மடிதவழ்ந்து

அவளைப் பற்றி அவளிடமே

கேட்டுத் தெரிந்துக்கொள்ள

தவறியது தவறியதுதான்

என்பது மறந்து!
#sof_sekar

எழுதியவர் : #Sof #sekar (23-Jul-17, 8:34 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : thaay
பார்வை : 419

மேலே