ஆதரவற்றோரைப் பராமரிக்கும் இல்லங்கள் நிலை

இன்றைய அவசர உலகில் ஒரு குடும்பத்தில் இருக்கும் 3,4 பேர்களது, தேவையைப் பூர்த்தி செய்வதே கடினமாக இருக்கும் காலகட்டத்தில்,எண்ணிக்கையில் அதிகமான ஆதரவற்றோரைப் பராமரிக்கும் இல்லங்கள் நிலை என்னவாக இருக்கும் என்பதை நினைத்துப் பார்ப்பதே கஷ்டம்தான். இதை உணர்ந்து நம்மில் பலர், பிறந்தநாள், திருமண நாள் மற்றும் பண்டிகை நாட்களில் ஆதரவற்றோர் வாழும் இல்லங்களுக்குப் போவதும் அவர்களுக்கு உதவிகள் தருவதும் வாடிக்கையாகக் கொண்டிரருக்கின்றனர்.அத்தகைய செயல் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளது,அவர்களது அடிப்படைத்தேவைகள் நிறைவேறுகின்றன‌ என்றாலும்,அதுஅவ்ர்களுக்கு மனநிறைவு தரும் செயலாக இருக்குமா அதனை மன நிறைவுதரும் செயலாக எப்படி மாற்றலாம்?
1.அந்த அமைப்பு நிர்வாகிகளுடன் முதலில் தொடர்பு கொண்டு அவர்களின் தேவை என்ன எனத் தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுக்கு விருப்பமானதைக் கொடுப்பதை விட, அவர்களுக்குத் தேவையானதைக் கொடுப்பது சிறந்தது.

2.இனிப்பு,பழவகைகள் அல்லது ஏதேனும் பொருட்களை வரிசையில் நிறுத்தி கொடுக்காதீர்கள்.அவ்வமைப்பு நிர்வாகிகளிடம் கொடுத்து அவர்கள் மூலமாகவே பகிர்ந்தளியுங்கள்.முன்பின் தெரியாத ஒருவரிடம் அவ்வாறு வாங்குவது அவர்களின் தன்மானத்தை காயப்படுத்தலாம்

3.பழைய ஆடைகள், பழைய நோட்டுகள் போன்றவற்றைத் தரும்போது அவை உபயோகிக்கும் நிலையில் உள்ளதா என ஒன்றுக்கு இரண்டுமுறை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். ஆடைகளைத் துவைத்து, கிழிந்திருப்பின் அவற்றைத் தைத்துக் கொடுங்கள்.பல நோட்டுகளில் இருக்கும் உபயோகப்படுத்தாத பக்கங்களை ஒரே நோட்டாக பைண்ட் செய்தோ அல்லது தைத்தோ கொடுங்கள்.

4.தீபாவளி,பொங்கல்,புது வருடம் போன்ற பண்டிகை நாட்களில் ஸ்பான்சர் செய்பவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். நன்கொடைகளும் கிடைக்கும். அதனால் நீங்கள் ஏதேனும் கொடுப்பதையோ அல்லது அந்த இல்லங்களுக்குச் சென்று அவர்களுடன் பொழுதைக் களிப்பதையோ சாதாரண நாட்களில் வைத்துக் கொள்ளுங்கள்

5.அங்கே செல்லும்போது, படாடோபமான உடைகளைத் தவிர்த்து,முடிந்தவரை எளிமையாய்ச் செல்லுங்கள்
6.அங்கு குழந்தைகள் இருப்பின், அவர்களுடன் உங்கள் குழந்தகளை விளையாட அனுமதியுங்கள்

7.நீங்கள் கொடுக்கும் பொருட்களைவிட உங்களது அன்பான சொற்கள் அவர்களுக்கு மிகுந்த மகிழ்வைத் தரும். எனவே அவர்களுடன், சிறிது நேரமாவது செலவிடுங்கள் 8.அங்குள்ளவர்களது சிறு,சிறு தேவைகளைக் கேட்டு அவற்றைப் பூர்த்தி செய்ய முயலுங்கள்

9.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வேறு வேறு இல்லங்களுக்குச் செல்வதை விட ஒரே இல்லத்திற்கு அடிக்கடி‌ செல்வது ஒரு அந்நியோன்யத்தை அவர்களிடம் உண்டாக்கும்

10.நீங்கள் ஏதேனும் ஸ்பான்சர் செய்யும் நேரங்களில் மட்டும் தான் அங்கு செல்ல வேண்டும் என்பதில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அங்கு சென்று அவர்களுக்கு சிறு சிறு உதவிகள் செய்யலாம்.

இவற்றைப் பின்பற்றினால் அவர்களது ஏக்கங்களும் ஒரு முடிவுக்கு வரும்.நமக்கும் உறவுகளின் எண்ணிககை அதிகரித்ததைப் போன்ற ஒரு தெம்பைத் தரும்.

எனக்குத் தோணுணத சொல்லிட்டேன்.ஏதேனும் வழி விட்டுப்போயிருப்பின் பின்னூட்டத்தில் சொல்லுங்க.
பதிவு பயனுள்ளதாக இருந்தால்,தமிழ்மணம்,தமிழிஷ்ல ஓட்டுப் போட்டிடுங்க. நிறைய பேர் படிக்கட்டும்

எழுதியவர் : (23-Jul-17, 10:49 pm)
பார்வை : 80

சிறந்த கட்டுரைகள்

மேலே