வெள்ளை மனம்

வெள்ளை மனம் கொண்டோர் அன்பும் அழகானது
காசு பணம் நோக்காது
அன்பை மட்டும் புரிந்து கொள்ளும்
வெள்ளை மனம் கொண்டோருடன் நிலைத்து நிற்கும் பாசம்
அல்லாதோருடன் மாயை போன்று வந்து மறையும்
களவு மனம் கொண்டோர் பொய்களில் விருப்பம் கொள்வதால்
சந்தோசம் மலர்வதில்லை
வெள்ளை மனம் கொண்டோர் உண்மைகளை விருப்புவதால்
சந்தோசமலர்கள் மலர்ந்த வண்ணம் இருக்கிறதே
நல்ல எண்ணம் கொள்ளும் வெள்ளை மனம் முடையோர்
மனம் கலக்கம் இல்லாதது இதனால் போலி மீது
மயக்கம் கொள்வதில்லையே
கள்ள உள்ளம் கொண்டு உயந்து இருப்பது
பெருமை அல்ல
வெள்ளை மனம் கொண்டு
உயந்து இருப்பதே பெருமை

எழுதியவர் : கலையடி அகிலன் (24-Jul-17, 11:00 am)
Tanglish : vellai manam
பார்வை : 87

மேலே