எம் பேத்தி பேரு குரங்கா

வாம்மா வெண்ணிலா. அடடடே எம் பேத்தியும் வந்திருக்காளா? ரொம்ப அழகா இருக்கறா எம் பேத்தி. உந் திருமணம் ஆன கையோட நீயும் எம் மருமவனும் பீகார் போனவங்க மூணு வருசம் கழிச்சு நீயும் எம் பேத்தி மட்டும் வந்திருக்கீங்க. எம் மருவ பயலுக்கு என்னாச்சு?
😊😊😊😊😊
இல்லப்பா. அவுரு மாவட்ட காவல்துறை அதிகாரியாச்சே. அவ்வளவு சீக்கிரம் விடுப்பு கெடைக்குமா? இன்னும் ரண்டே நாள்ல வந்திருவாருங்க அப்பா.
😊😊😊😊😊😊
அம்மா, தங்கச்சி எல்லாம் எங்கப்பா?
😊😊😊😊😊😊
உங்கம்மா இப்ப புதிசாக் கட்டின கண்ணகி கோயிலுக்கு போயிருக்கறா. உந் தங்கச்சி தமிழருவி அவ தோழியப் பாக்கப் போயிருக்கா. சரி, எம் பேத்திக்கு அவ அழகுக்குத் தகுந்த மாதிரி பொருத்தமான பேர வச்சிருக்கீங்களா.
😊😊😊😊😊
'மான்'-ங்கற அர்த்ததில ஒரு இந்திப் பேர வச்சிருக்கறம்பா.
😊😊😊😊😊😊
ஏம்மா வெண்ணிலா, நீங்க பீகார்ல இருக்கறதால கொழந்தைக்கு இந்திப் பேரத்தான் வச்சாகணும்னு கட்டாயமா? தமிழ் நாட்டில லட்சக்கணக்கான இந்திக்காரங்க பல தலைமுறையா வாழ்ந்திட்டிருக்காங்க. அவுங்கள் ஒருத்தருகூட தன்னோட பிள்ளைக்குத் தமிழப் பேர வச்சமாதிரி தெரிலயே!
😊😊😊😊
நீங்க இப்பிடி சொல்லறீங்க. ஆனா தமிழ் நாட்டில 95% பேருக்கு மேலே.
அவுங்க பிள்ளைங்கதளுக்கு சினிமா ரசனையில இந்திப் பேருங்களத்தான் வச்சிருக்காங்க.
😊😊😊😊😊
மத்தவங்கள நாம கொற சொல்லிப் பிரயோசனம் இல்லம்மா. நம்ம ஒடம்பில தமிழ் குருதி (ரத்தம்) ஓடுதுங்கறத மறக்கமுடியுமா? உம்...சரி. எஞ் செல்லப் பேத்தி பேரச் சொல்லும்மா.
😊😊😊😊😊
உங்க பேத்தி பேரு குரங் (Kurang).*
😊😊😊😊😊
சிவ சிவ சிவனே! இதென்னடா அநியாயம். குரங்(கு)ன்னு பேரு வைக்கறதா? "கண்ணுதற் பெருங் கடவுளும் கழகமோ டமர்ந்தாய்ந்து"
தமிழை வளர்த்தாருங்கறத நீ நடிகர் திலகம்' நடிச்ச 'திருவிளையாடல்' படத்தை எத்தன தடவ பாத்திருக்க. அப்படிப்பட்ட நம்ம தமிழ இழிவு படுத்திட்டேயடா வெண்ணிலா. குரங்(கு)-ங்கற பேருக்கு பதிலா மான்விழி, தேன்மொழி, மலர்விழி -ன்னு ஏதாவது ஒரு தமிழப் பேர வச்சிருக்கலாமே. சரி, சரி. உன்னோட வீட்டுக்காரன் வந்ததுக்கப்பறம் உஞ் சித்தப்பாவைப் போயி பாருங்க. அவன் அந்த குரங்(கு)ங்கற பேர மாத்தி நல்ல தமிழப் பேர வைக்கறதுக்கு வேண்டிய ஏற்பாட்டைச் செய்வான்.
😊😊😊😊😊
சரிங்க அப்பா.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
சிரிக்க அல்ல. சிந்திக்க.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■indiachildnamescom
Kurang=Deer

எழுதியவர் : மலர் (24-Jul-17, 5:59 pm)
பார்வை : 226

மேலே