முதிரா கன்னி 6

"இந்த பொண்ணுக்கு திருப்பூர் பக்கம் ஒரு கிராமம். நடுத்தரமான குடும்பம்தான், இப்ப அவள கல்யாணம் பண்ணியிருக்கானே அந்த பையன் இவ ஊருக்கு ஒரு வேலையா போயிருக்கான். போன எடத்துல இந்த பொண்ண பார்த்து பேசி, பழகி காதலிக்கிறேன்னு சொல்லி யாருக்கும் தெரியாம கூட் டிகிட்டு வந்து ஒரு கோயில்ல வச்சு தாலிய கட்டி இங்க கூட்டிகிட்டு வந்துட்டான்.இத்தனைக்கும் எவ்வளவு நாள் பழக்கம் பாரு... ஒரு மாசம் கூட கிடையாது. அதுக்குள்ள அவன் பேசுன பேச்சில மயங்கி வந்துருக்கா பாரு இவள சொல்லனும்...

"மாப்ள... நானுந்தாண்டா ஊர்ல ஒரு புள்ளைய விவரந் தெரிஞ்ச வயசுலேர்ந்து காதலிக்கிறேன். இன்னும் நாங்கற வார்த்தைகுள்ள நாக்கு சுருண்டுக்குது... அத தாண்டி அடுத்த வார்த்தை வரமாட்டேங்குது. இவன் என்னடான்னா... ஒரு மாசத்துக்குள்ளேயும் அவ்வளவையும் முடிச்சிட்டான். இவனுகிட்டதான் மாப்ள கிளாஸ் போகணும்..." நண்பன் காதுக்குள் கிசுகிசுத்தான்.

" உன் பிரெண்ட் என்ன காத கடிக்கிறான்."

"அது ஒண்ணும் இல்ல ஆன்ட்டி... சும்மா ஏதோ உளர்றான்... நீங்க பிரச்சினை என்னன்னு சொல்லுங்க..."

" எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டு இருந்துருக்கு. இப்ப ஒரு ரெண்டு நாளா அவனோட பேச்சும் , நடவடிக்கையும் சரியில்லேன்னு சந்தேகப்படுறா... நைட்ல இவ தூங்கிட்டான்னு நெனச்சு யார்கிட்டே யோ... எல்லாம் தயாராத்தான் இருக்கு... ஒண்ணும் பிரச்சினையில்ல, நான் எங்க கூப்பிட்டாலும் வருவா... அப்படின்னு போன்ல குசுகுசுன்னு பேசியிருக்கிறான். காலையில கேக்குறதுக்கு... அதலாம் ஒண்ணுமில்லேன்னு மழுப்பலா பதில் சொல்லிட்டு வெளியில போயிருக்கான். அதான் சொல்லிட்டு அழறா... இப்ப என்ன பண்றதுன்னு ஒண்ணும் புரியல..."

கொஞ்ச நேரம் யோசித்து விட்டு..." இப்படி பண்ணலாம் ஆன்ட்டி. போலிஸ்ல விசயத்த சொல்லி ஏதாவது உதவி கேட்கலாம்."

"சரி அப்படித்தான் பண்ணனும். வேற வழியில்ல. நீங்க ரெண்டு பேரும் போயி போலிஸ்ல விசயத்த சொல்லுங்க..."

"நீ என்ன பண்றே அவன் வந்தா , சந்தேகம் வர்ற மாதிரி நடந்துக்காதே... எப்போதும் போல இயல்பா இரு. என்னதான் பண்றான்னு பார்க்கலாம்..."

தொடரும்...

எழுதியவர் : பனவை பாலா (24-Jul-17, 10:33 pm)
சேர்த்தது : பனவை பாலா
பார்வை : 287

மேலே