அய்யனார் கோயிலும் அபுபக்கர் வகையறாவும்

கவிஞர் கவி வளநாடனின் ‘அய்யனார் கோயிலும் அபுபக்கர் வகையறாவும்’என்கிற தொகுப்பு காரைக்குடி சமையல் போல் கிராமியச் சுவையோடு கமகமக்கிறது. கிராமங்களின் தன்மை மெல்ல மெல்லத் திரிந்துவரும் இந்த நேரத்தில் வளநாடன் தன் நினைவில் தழைத்திருக்கும் தனது கிராமத்தைத் தனது படைப்பிற்குள் பதமாகப் பத்திரப்படுத்தியிருக்கிறார். இதற்காகத் தமிழ்ச் சமூகம் வளநாடனை வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறது.




சின்னச் சின்ன அத்தியாயங்கள். அவற்றில் விதவிதமான கிராமத்து மனிதர்கள். எல்லோருமே பாசாங்கின்றி புனைவுகளின்றி வளநாடனின் சொற்களின் கைபிடித்து நம் கண்முன் அச்சு அசலாக வந்து போகிறார்கள். எல்லோருமே வெள்ளந்தி மனிதர்கள். வாழ்வோடு அந்நியம் பாராட்டாதவர்கள். ஒருவரோடு ஒருவர் உறவுபேணி அன்பாடு வாழ்ந்துகரைகிறவர்கள். அவர்களைப் படம் பிடிக்கும் வளநாடனின் எழுத்தின் ஈரம் மகிழவும் நெகிழவும் வைக்கிறது.

அன்றைய தனது இளமைக்கால கிராமத்தின் பசுமையையும் தனது கதாபாத்திரங்கள் பலரையும் பறிகொடுத்துவிட்டு அரைகுறையாய் நிற்கிற இன்றைய கிராமத்தையும் வளநாடன் ஒப்பிட்டுச் சொல்கிறபோது அவருக்கு வலிக்கிறதோ இல்லையோ நமக்கு வலிக்கிறது.



கிராமங்களுக்கே உரிய ஆழ்ந்த அனுபவங்களையும், தான் வாழ்ந்த அனுபவங்களையும் சரிவிகிதக் கலவையோடு சுவையாகக் கொடுத்திருக்கிறார் வளநாடன். தமிழுக்குக் கிடைத்திருக்கும் அரிய நூல்களில் ஒன்றாக இந்நூல் திகழ்கிறது. இந்த நூல் விருதுகளால் கெளரவிக்கப்பட வேண்டும்.




அய்யனார் கோயிலும் அபுபக்கர் வகையறாவும்

விலை: ரூ 90.

முகவரி: இருவாட்சி

(இலக்கியத் துறைமுகம்)

41,கல்யாணசுந்தரம் தெரு

பெரம்பூர் சென்னை-600 011.

அலைபேசி: 94446 40986

எழுதியவர் : (25-Jul-17, 2:27 am)
பார்வை : 45

சிறந்த கட்டுரைகள்

மேலே