என்னங்க

இதயம் அறிந்திருக்கிறது
உந்தன் அருகாமையை ...
இப்படி வேகமாக துடிக்கிறதே ...

உறங்கி கொண்டிருந்த கண்களை தாண்டி
இதயம் எப்படி உணர்ந்தது ..
உந்தன் சிறுபொழுது பிரிவை ...
துடிப்பை உன்னோடு கடத்தி விட்டு
ஓய்வெடுக்கிறதே ...

நீ அருகில் இல்லா நொடி
உன்னோடு பேசிக்கொண்டே இருக்கிறேன் ...
நீ அருகில் வரும் பொழுதோ ...
வார்த்தை விக்கித்து
நெஞ்சை அடைத்து
கைகள் விறைக்கிறதே ...

என்னருகில் வந்து
விரலோடு விரல் கோர்க்கும் பொழுது ...
ஊமையாகி என் கண்கள் பேசுவதை உணர்கிறாயா ...

ஒளிந்து விளையாடிடும் கள்வா ...
பின்னால் இருந்து கட்டி அணைக்கும் பொழுது
எந்தன் ஒற்றை துளி கண்ணீரின் அர்த்தம் விளங்குதில்லையா ...
உன்னை பார்த்ததும் பூக்கும் என் புன்னகை புரிகிறதில்லையா ...

தலையணை தவிர்த்து ...உன் மடியில் உறங்குவேன் ...
உன் நெஞ்சணையே என் பஞ்சணை ...
என் தகன மேடை உன் மடியில் இருந்து என்னை பிரித்து என் உடலை தூக்கி வைப்பதே ...
உன் உடலில் எங்கு வலித்தாலும் இங்கு என்னை அறியாமலேயே என் உயிர் துடிக்கிறது ...

என் மார்பில் உன்னை தாங்கிடுவேன் ...
என் இதயத்தில் உன்னை சுமந்திடுவேன்...
ஓடும் உதிரத்தில் உன்னை கரைத்திடுவேன் ...
என் இதயத்துடிப்பு நீயாவாய் ...
உன்னை இறுக்கிக்கொள்வேன் எந்தன் மார்போடு
உன்னை போர்த்திக்கொள்வேன் எந்தன் உயிரோடு
மூச்சு நின்றாலும்
என் மூச்சை உன்னில் கடத்தி
உன்னில் தங்கிடுவேன் ...
உன் இதயத்தில் வாழ்ந்திடுவேன் ...

என்னங்க
நெஞ்சில் ஆணி இறங்கி இருந்தாலும் ...
அதனால் நெஞ்சு வலித்தாலும் ...
நெஞ்சு மிகையான சந்தோசத்தை தாங்க இயலாமல் நின்றாலும்...
உங்களை அணைத்துக்கொண்டு தான் இருப்பேன் ... அப்பொழுதும்
உங்களை என் மார்போடு என்றும் சுமந்திருப்பேன் ..... எப்பொழுதும்

மாமா
உன் மார்பில் மயங்கிட வேண்டும் ...
உன் உயிரில் கரைந்திட வேண்டும் ...
உன் இதயத்தில் உறைந்திட வேண்டும் ...

என்னவளே .....
எனக்குள் தானே இருக்கிறாய் ...
எப்பொழுதும் .....

என்னங்க
வேலை இருக்கிறதா ...
ஆம் ...
என்ன வேலை ...
உன்னை ரசித்துக்கொண்டிருப்பது ...
விளையாடாமல் சொல்லுங்க ...
உறக்கம் வருகிறது ...
உங்கள் மடியில் உறங்க போகிறேன் ...
வார்த்தை கூறாமல்
மார்பில் இருந்து அள்ளி எடுத்து
மடியில் என்னை தாங்கி
என் தலையை வருடி விட்டு
விரலை கோர்த்துக்கொண்டு
கண்ணோடு கண் நோக்குகிறாய் ...
வார்த்தை எப்படி வரும் ...
நீயே கேளேன் என் இதயத் துடிப்பை ...
மாமா இந்த நொடி என் உயிர் மரித்தாலும் எனக்கு சம்மதமே ...
நீ அருகில் இருக்க அதுவும் உன் மடியில் நான் கிடக்க
என் மரணம் நிகழும் என்றால்
இந்த உலகில் என்னை போல் கொடுத்து வைத்தவள்
யாரும் இல்லை ...

வாயை மூடி
ஏனடி ...
உன்னோடு நான் யுகங்கள் கடந்து
சென்ம சென்மங்கள் வாழ வேண்டும் ...
நமக்கு பிரிவே கிடையாது...
என்று கூறி நெற்றியில்
அவர் அன்பின் மொத்தத்தையும்
ஒரு முத்தத்தில் பதித்தார் ...

அனைத்தும் நடக்கும் அன்பே ...
மனதில் இப்பொழுது என் மரணம் நிகழ்ந்தால் நன்றாக இருக்குமே என்று உணர்ந்தேன்
அதை சொன்னேன் ...
உன்னை விட்டு பிரிவேனா...
எப்பொழுதும் உன்னுடன் தான் இருப்பேன் ...
அதே போல் என்னை விட்டு ஒரு நொடி பிரிந்தாலும் உன்னை கொன்றுவிடுவேன் மாமா பாத்துக்கோ ...
ஹா ஹா ...என்னை உன்னால் கொல்ல முடியுமா என்ன ?????.....

உன் மீது ஒரு தூசி பட்டாலும் துடித்திடுவேனே ..... நீ அறியாததா .....
நமக்கு பிரிவென்பதே நம் மரணம் தானே ...
ஒரு வேளை என்னை விட்டு நீ பிரிவாய் என்றால்
நீ என் அருகில் இருக்க வேண்டும் என்பது கூட தேவையில்லை
என் மனதிற்கு தெரிந்து விடும் மாமா
நீ மரிக்கும் வேளை நானும் மரித்திருப்பேன் ...
நீயும் நானும் ஒன்றாக கைகோர்த்து மேலே சென்றிடுவோம் ...
நமக்கு பிரிவென்பதே கிடையாது .....
நம் மரணம் கூட நம்மை பிரிக்காது .....

என்னை அள்ளி எடுத்து அணைத்துக்கொண்டு
முத்தங்கள் முகம் முழுக்க வைக்கின்றார் ...
நானும் அவரை அணைத்தபடி முத்தமிட்டு
நெஞ்சணைத்தபடி பஞ்சணையில் விழுந்து
கண்ணோடு கண்ணோக்கி புன்னகைத்து
வார்த்தை இல்லாமல் பேசி உறங்கிவிட்டோம்
ஒருவரை ஒருவர் போர்த்திக்கொண்டு .....

! விடியும் நாளும் ...முடியும் உன்னாலும் ... !

* என்னங்க யாவும் உங்களுக்கானது...இவ்வரிகளும் உங்களுக்கானது ... *
என்னங்க உங்கள் மனைவி பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (25-Jul-17, 8:19 am)
Tanglish : yennanga
பார்வை : 508

மேலே