புத்தகத்தில் உலகத்தைப் படிப்போம் உலகத்தையே புத்தகமாகப் படிப்போம்

நூலகம் அறிவை வளர்க்கும் ஓர் இடமாகும். வாழ்வியல், வரலாறு, இலக்கியம், நிலநூல், மேற்கோள் நூல்கள், சிறுகதைகள், மனோதத்துவம், வார, மாத சஞ்சிகைகள், நாளிதழ்கள் அனைத்தும் நூலகங்களில் கிடைக்கும்.
நம் நாட்டில் தேசிய நூலகம், மாநில நூலகம், என பொது நூலகங்களும்,மற்றும் நடமாடும் நூலகங்களும் இருக்கின்றன. ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களும் ஆசிரியர்களும் படித்துப் பயனடையும் வகையில் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நூலகத்தில் அறிவை வளர்க்கக்கூடிய பலதரப்பட்ட விஷயங்களை நாம் அறிந்து கொள்ளலாம். நமது ஆராய்ச்சிக்குத் தேவைப்படும் விஷயங்களும் அங்குக் கிடைக்கும். மேலும், நமது மொழி வளத்தைப் பெருக்குவதற்கும் வாசிப்பைச் சரளமாக்குவதற்கும் நூலகம் முக்கியப் பங்காற்றுகிறது.
“நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு” என்று ஒளவையார் கூறியுள்ளார். நாம் எவ்வளவு படிக்கிறோமோ அந்த அளவிற்கு நமது அறிவு வளர்ச்சியடையும். அதற்கு முதுகெலும்பாகத் திகழ்வது நூலகமே.
தொடக்கப் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் நூலத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, மாணவர்களாகிய நாமும் நூலகம் தரும் பயம் அறிந்து அங்கு நூல் பல கற்று அறிவை வளர்த்துக் கொள்வோம்.

பள்ளியில் தினமும் பலவிதமான À¡¼í¸¨Çô படிக்கின்றோம். அவை அந்தந்தப் பாடங்கள் சம்பந்தப்பட்டவையாகும். இவற்றைப் படித்துவிட்டு நான் தினமும் படிக்கின்றேன் என்றால் தவறாகும். பள்ளிப் பாடங்கள் மட்டும் நம் அறிவை வளர்க்காது. பாடங்கள் சம்பந்தப்பட்ட மேலும் பல தகவல்களைப் பெற நாம் வேறு பல நூல்களை வாசிக்க வேண்டியது அவசியமாகிறது.
ஒரு மொழியில் புலமை பெற அம்மொழியில் வெளிவந்துள்ள பல புத்தகங்களை வாசிக்க வேண்டும். அவ்வாறு வாசிப்பதனால் அம்மொழியில் நாம் புலமை பெற முடியும். மொழி வளத்தைப் பெருக்கி கொள்ள முடியும். ஒரு மொழியில் உள்ள பல புதிய சொற்களை அறிய அம்மொழி நூல்களை வாசிக்க வேண்டும். அத்துடன் அவற்றின் பொருளை உணர்ந்து சரியான முறையில் பயன்படுத்தவும் வாசிப்பு அவசியமாகிறது.
மொழி வளத்தைப் பெருக்கும் அதே வேளையில், பொது அறிவையும் வாசிப்பதன் மூலம் வளர்த்துக் கொள்ள முடியும். பல துறைகளைச் சார்ந்த புத்தகங்களை வாசிப்பதால் அத்துறைகளைப் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள முடிகிறது. இடன் மூலன் நாம் தகவல் அறிந்த சமுதாயமாக மாற, வாசிப்பு துணைபுரிகிறது.
இந்த நவீன உலகில் மனிதன் இயந்திரமாக Å¡Æ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வியந்திர வாழ்க்கையிலிருந்து மீண்டு மனமகிழ்வு பெறவும் வாசிக்கும் பழக்கம் உதவுகிறது. கடை, கட்டுரை, கவிதை.,செய்யுள் போன்றவற்றை வாசிப்பதன் மூலம் அவற்றின் சுவையை உணர்ந்து இரசிப்பது மனம் மகிழ்கின்றது.
க் கதை, கட்டுரை, கவிதை எழுத விரும்புகிறவர்கள் முதலில் அவை தொடர்பான பல நூல்களைப் படித்து அறிய வேண்டும். அப்போதுதான் சொந்தப் படைப்புகளைப் படைக்கும் போது அவை தரமானவையாக இருக்கும். பல தகவல்களைத் தன்னுடைய படைப்புகளில் புகுத்த முடியும்.
எனவே, வாசிப்பு நமக்கு எவ்வளவு அவசியமாகிறது என்பதை அறிய முடிகிறது“நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு” என்பதற்கேற்ப பல நூல்களை வாசித்து நம் அறிவைப் பெருக்கிக் கொள்வோம்.

நூலகம் அறிவை வளர்க்கும் ஓர் இடமாகும். வாழ்வியல், வரலாறு, இலக்கியம், நிலநூல், மேற்கோள் நூல்கள், சிறுகதைகள், மனோதத்துவம், வார, மாத சஞ்சிகைகள், நாளிதழ்கள் அனைத்தும் நூலகங்களில் கிடைக்கும்.

நம் நாட்டில் தேசிய நூலகம், மாநில நூலகம், என பொது நூலகங்களும்,மற்றும் நடமாடும் நூலகங்களும் இருக்கின்றன. ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களும் ஆசிரியர்களும் படித்துப் பயனடையும் வகையில் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நூலகத்தில் அறிவை வளர்க்கக்கூடிய பலதரப்பட்ட விஷயங்களை நாம் அறிந்து கொள்ளலாம். நமது ஆராய்ச்சிக்குத் தேவைப்படும் விஷயங்களும் அங்குக் கிடைக்கும். மேலும், நமது மொழி வளத்தைப் பெருக்குவதற்கும் வாசிப்பைச் சரளமாக்குவதற்கும் நூலகம் முக்கியப் பங்காற்றுகிறது.

“நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு” என்று ஒளவையார் கூறியுள்ளார். நாம் எவ்வளவு படிக்கிறோமோ அந்த அளவிற்கு நமது அறிவு வளர்ச்சியடையும். அதற்கு முதுகெலும்பாகத் திகழ்வது நூலகமே.

தொடக்கப் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் நூலத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, மாணவர்களாகிய நாமும் நூலகம் தரும் பயம் அறிந்து அங்கு நூல் பல கற்று அறிவை வளர்த்துக் கொள்வோம்.
1) என்னைத் தேடி நீ வந்தால்!, உன்னைத்தேடிஉலகம் வரும்!!

2) கற்றோர் கற்கின்ற அறிவகம்!, கரங்கூப்பி வரவேற்கும் அன்பகம்!!

3) அறிவுப் பசிக்கு விருந்தகம்! அறியாமைப் பிணிக்கு மருந்தகம்!!

4) அறிவால் உயர்ந்து அரியாசனம் அமர்வோம்! நூலகம் நமக்கு ஓய்வு நேர உலகம்!!

5) புத்தகத்தில் உலகத்தைப் படிப்போம்! உலகத்தையே புத்தகமாகப் படிப்போம்!!

6) வாசிப்போம்! மாத்தி யோசிப்போம்!!

7)ஒரு தீக்குச்சியில் ஒளிந்திருக்கும் நெருப்பு என்னும் அபரிமிதமான ஆற்றலைப் போல் உன்னுள் ஒளிந்திருக்கிறது ஓராயிரம் ஆற்றல்!?! என்னைப் பயன்படுத்தினால்! சிறு நெருப்பாற்றலால் அறையில் பரவும் வெளிச்சத்தைப் போல் பிரகாசிக்கும் உனது ஆற்றல்!!

8) திட்டமிடலும், நேர நிர்வாகமும் அவசியம்! குறிப்பெடுக்கக் கற்றுக்கொள்!!

9) தன்னம்பிக்கை!, குறிக்கோள்!!, திறமை!!! இவையே தகுதி ஆகும்.



( கலைப் பிரிவு , அறிவியல் பிரிவு, கணிணிப் பிரிவு, பத்திரிக்கைகள் பிரிவு, ஆராய்ச்சிப் பிரிவு,சிவில் சர்வீஸ் , டி.என்.பி.எஸ்.சி., யூ.பி.எஸ்.சி. போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்திக்கொள்ள என்றே தனிப் பிரிவு ,பழைய கேள்வித்தாள்கள் சேகரிக்கப்பட்ட பிரிவு,பழைய பத்திரிக்கைகள்+ சஞ்சிகைகள் சேகரிக்கப்பட்ட பிரிவு ,முனைவர் பட்டம் பெற்ற மாணவர்கள் சமர்ப்பித்துள்ள ஆராய்ச்சிக் கட்டுரைகள் சேகரித்து வைத்துள்ள பிரிவு


அ) கையகப்படுத்துதல் -(Acquisition )
ஆ)தகவல் சேகரிப்பு _ (Data base )
இ) புத்தகங்களை சுழற்சி முறையில் வழங்கல் -( Circulation)
ஈ) தேடல் - (Book Search)
என நான்கு வகைகளில் ( Management )நிர்வகிக்கப்படுகிறது






வேலை நேரம் = காலை 09.00மணி முதல் மாலை 06.00மணிவரை
(எந்நேரமும் நூலகத்தைப் பயன்படுத்த அனுமதி உண்டு )

7)இருப்பில் உள்ள புத்தகங்கள் எண்ணிக்கை = 56,624 புத்தகங்கள் ஆகும். Number of Volumes = 45,681 இவை தவிர

8) ஒவ்வொரு துறைகளிலும் புத்தகங்கள் தனித்தனியாக ஆயிரக் கணக்கில் உள்ளன.
9) REFERANCE SECTION - ல் விலை உயர்ந்த மற்றும் அரியவகை புத்தகங்கள் 4,000 எண்ணிக்கையில் உள்ளன.
10) பத்திரிக்கைகள்,சஞ்சிகைகள் ,செய்திக்குறிப்புகள்- நடப்புகள் SHELF-ன் முன்பகுதியில் காணத்தக்கவகையிலும், பழையவைகள் SHELF-ன் உள்பகுதியில்(Trolley) இலகுவாக எடுக்கும் வகையிலும் அலமாரிகள் (DISPLAY- RACK's ) -கள் அமைக்கப்பட்டுள்ளன.



நூலகத்தினை அதிகமாகப் பயன்படுத்தும் மாணவர்களில் ஒவ்வொரு வருடமும் இளங்கலை மாணவர்கள் பத்து நபர்கள் மற்றும் முதுகலை மாணவர்கள் பத்து நபர்கள் வீதம் தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்பாக நூலகத்தைப் பயன்படுத்தியமைக்கான சிறப்பு விருது ( BEST USER AWARD ) வழங்கப்படுகிறது.



நூலக அலுவலர்கள் விபரம்;

நூலகப் பொறுப்பாளர் = ஒருவர்

உதவி நூலகர்கள் = மூன்று நபர்கள்

நூலக உதவியாளர் = ஒருவர்

கணினியியலர் = ஒருவர்

எழுத்தர் = ஒருவர்

துப்புரவாளர் = ஒருவர்







புத்தக இருப்பு 15-07-2011-ன் நிலவரப்படி
1) பொது மேலாண்மைத் துறை =9435 புத்தகங்கள்,

2) கணினி அறிவியல் துறை = 9318 புத்தகங்கள்,

3) பொருளாதாரம் துறை = 6693 புத்தகங்கள்,

4)ஆங்கிலம் துறை = 5059 புத்தகங்கள்,

5) இயற்பியல் துறை = 4458 புத்தகங்கள்,

6) கணிதம் துறை = 4310 புத்தகங்கள்,

7) வேதியியல் துறை =2445 புத்தகங்கள்,

8) தாவரவியல் துறை = 2184 புத்தகங்கள்,

9) வரலாறு துறை = 1804 புத்தகங்கள்,

10) தமிழ்த் துறை = 1967 புத்தகங்கள்,

11) அரசியல் துறை = 1069 புத்தகங்கள்,

12) உளவியல் துறை =0 911 புத்தகங்கள்,

13) விலங்கியல் துறை =0899 புத்தகங்கள்.






இவை தவிர புத்தக வங்கி என்று தனிப் பிரிவு ஒன்று உள்ளது.இந்த புத்தக வங்கியில் உள்ள புத்தகங்கள் நன்கு படிக்கும் மாணவ,மாணவியருக்கும் மற்றும் ஏழ்மையில் உள்ளவர்களுக்கும் ஆண்டு முழுவதும் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. மற்ற மாணவர்களுக்கு பதினைந்து நாட்கள் காலக்கெடு வைத்து அனுமதிக்கப்படுகிறது.









பொது அறிவுக்கான புத்தகங்கள் GENERAL STUDIES, MANORAMA YEAR BOOK -1970-ம் ஆண்டு முதல் இன்று வரையிலான புத்தகங்கள், மற்றும் BANKING, UPSC, TNPSC, MAT, SAT, SLET, NET, GATE, GMAT, TOFEL, MBA, MCA, போன்ற போட்டித் தேர்வுக்கான புத்தகங்களும் அதிக அளவில் உள்ளன.








தினசரிப் பத்திரிக்கைகள் (Journals),
வார,இருவார,மாத,வருடப் பத்திரிக்கைகள் (Magazines),
செய்திக் குறிப்புகள் (Bulletin), ஆகியன
பன்னிரண்டு துறைகளுக்கும் சேர்ந்து
தேசிய அளவில்(National) = 130 பத்திரிக்கைகளும்,
சர்வதேச அளவில் (International) = 13 பத்திரிக்கைகளும் இந்த நூலகத்திற்கு தருவிக்கப்பட்டு வழங்கப்படுவதுடன் ,
1968-ம் ஆண்டு முதல் இன்று வரை சிறப்பான முறையில் கட்டு இடப்பட்டு (Binding) பாதுகாக்கப்பட்டு வருவது
இக் கல்லூரி நூலகத்தின் தனிச் சிறப்பு ஆகும்.






புத்தகங்கள் தேடுவதற்கென்றே Searching Division-ல் ஆறு கணினிகள் இயக்கத்தில் உள்ளன.இங்கு TO DAY 's Arrival என உள்ள Searching Terminal -ல் BOOK- Search / CD - Search / Book User List / Project Search பல பிரிவுகள் தேடும் பணிகளைச் செய்கின்றன.
BOOK SEARCH - பிரிவில் Book Title / Auther Name / Publisher Name / Subject code / Sub Title / Total Details -இவ்வாறு
1) எந்தத் துறை சார்ந்த புத்தகமாக இருந்தாலும்,
2) எந்த ஆசிரியர் எழுதியதாக இருந்தாலும்,
3) எந்த பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டிருந்தாலும்,
4) சர்வதேச அளவில் எழுதியதாக இருந்தாலும் ,
5) தேடப்பட்ட குறிப்பிட்ட புத்தகம் எந்த அறையில் ,
எந்த அலமாரியில் உள்ளது,
எந்த வரிசையில் உள்ளது,
எந்த இடத்தில் உள்ளது,
எத்தனையாவது எண்ணிக்கையில் உள்ளது . அல்லது
எந்த மாணவரிடத்தில்,
எடுத்துச் சென்ற தேதி மற்றும்
திருப்பிக் கொடுக்கும் தேதி பற்றிய விபரம் நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ளும் விதத்தில்-
ON LINE PUBLIC ACCESS CATALOGUE என்னும் OPAC - SYSTEM மிக நன்று!


புத்தகம் பைண்டிங் செய்யும் இந்த இயந்திரத்தின் மூலம் பழுதாகும் புத்தகங்களை உடனுக்குடன் சரி செய்து அலமாரியில் உரிய இடத்தில் ஒழுங்காக அடுக்கிவிடுவதால் புத்தகம் தேடும் மாணவர்களுக்கு எவ்வித சிரமும் இல்லாமல் பயன்படுத்த முடிகிறது.




நூலகம் உருவான வரலாறு..!!



Tweet
புத்தக பொக்கிஷம் என்று அழைக்கப்படும் நூலகங்கள் பற்றி முன்னுரை எழுத வேண்டிய அவசியம் இல்லை ஏனெனில் அதன் பயன்பாடுகளும் தேவைகளும் நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். வரலாற்று தகவல் மற்றும் அது தொடர்பான ஆவணங்கள் ஒரு தலைமுறை மக்களிடமிருந்து மற்றொரு தலைமுறை மக்களுக்கு சென்றடைவது நூலகங்களின் வாயிலாகத்தான் என்றால் மிகையில்லை.

சரி இந்த நூலகம் என்ற அமைப்பை உலகில் முதன் முதலில் நிறுவியவர்கள் யார் என்ற கேள்வி உங்கள் முன் எழுந்தால் உங்களது பதில் எதுவாக இருக்கும் பிரிட்டன், பிரான்ஸ் அமெரிக்கா, சீனா, ரஷ்யா ..,ம்ம்ஹீம் பண்டைய காலங்களில் மெசபடோமியர்கள் என்று அழைக்கப்பட்ட தற்போதைய ஈராக்கியர்கள் தான் உலகில் முதன் முதலில் நூலகம் என்கின்ற அமைப்பை ஏற்படுத்தியவர்கள், என்ன நண்பர்களே ஆச்சர்யமாக இருக்கிறதா வாருங்கள் அது பற்றி மேலும் தெரிந்துகொள்வோம்.

பண்டைய மெசபடோமியப் பிரதேசம் என்பது தற்போதைய டைகிரிஸ் மற்றும் யுபிரட்டஸ் ஆகிய ஆறுகளுக்கு இடைப்பட்ட நிலப்பரப்பாகும். முன்பு மெசபடோமியா என்ற ஒரே பெயரால் அழைக்கப்பட்ட கண்டம் தற்போது ஈரான், ஈராக் மற்றும் சிரியா ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறது. இக்கண்டத்தில் குறிப்பிடத்தக்க நான்கு பேரரசுகளாக விளங்கியவை சுமேரியா, பாபிலோனியா, அசிரியா மற்றும் அக்காத்தியர் ஆகும். மிகவும் புகழ் பெற்ற நாகரீகங்களாக உலகம் அடையாளம் கண்ட பாபிலோனியா மற்றும் சுமேரியா போன்ற நாகரீகங்கள் இங்கிருந்து பிறந்ததுதான்.

ஏறத்தாழ 3300 ஆண்டுகளுக்கு முன்பு அசிரியப் பேரரசின் நிர்வாக துறையில் ஏற்பட்ட குளறுபடிகளை களைய அப்போதைய அசிரியப் பேரரசின் அரசரான சென்னாசெர்ப் (கி.மு.1300 – கி.மு.1200) அரசாங்கத்தின் முக்கியமான ஆவணங்கள் அனைத்தையும் களிமண் தகடுகளில் எழுதி அவற்றை சூளைகளில் சுட்டு காயவைத்து பாதுகாப்பான இடங்களில் பத்திரமாக வைக்கும்படி உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து அரசாங்கத்தின் ஒப்பந்தங்கள், அரசாணைகள், அரசாங்க கடிதங்கள், அரசு உளவாளிகளிடம் இருந்து பெறப்படும் உளவு அறிக்கைகள் அரசு நிர்வாகத்துறையின் கீழ் வரும் முக்கிய ஆவணங்கள் போன்றவை களிமண் தகடுகளில் எழுதி சூளைகளில் சுட்டு அரசு கருவூலங்களிலும் சில கோவில் கருவரைகளிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. நாளடைவில் உயிர்காக்கும் மருத்துவக் குறிப்புகள், சமய நூல்கள் போன்றவையும் எழுதி பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

அசிரியப் பேரரசின் கடைசி அரசரான அசுர்பானிபல் (கி.மு.700 – கி.மு.600) காலத்தில் இக்களிமண் தகடுகளின் எண்ணிக்கை முப்பதாயிரத்தையும் தாண்டியது, அத்தனையையும் வெவ்வேறு இடங்களில் வைத்து பாதுகாப்பது சிரமமாக இருந்த காரணத்தினால் அனைத்தையும் அசிரியாவின் (தற்போது ஈராக்) தலைநகரான நினிவாஹ் (Nineveh –தற்போது மொசூல் (Mosul) ஒன்றிணைத்து அவற்றை துறைவாரியாக பிரித்து அடுக்க உத்தரவிட்டார். இதன்படி ஒவ்வொரு களிமண் தகடுகளும் துறை வாரியாக பிரித்து அடுக்கி பொதுமக்கள் பார்வைக்கு என்று விடப்பட்டது. இதுதான் உலகில் அமைக்கப்பட்ட முதல் நூலகம் ஆகும். இந்த நூலகம் The Royal Library of Ashurbanipal என்ற பெயரில் அழைக்கப்பட்டது. எனினும் பெரும்பாலான களிமண் தகடுகள் அரசாங்க ஆவணங்களாகத்தான் இருந்தது.

இந்த நூலகத்தை பற்றி தற்செயலாக கேள்விப்பட்ட அலெக்ஸாண்டர் (கி.மு.356 – கி.மு.323)நேரில் சென்று பார்வையிட்டார், அதனைதொடர்ந்து Ashurbanipal நூலகத்தை போல் அல்லது அதனைக்காட்டிலும் பிரம்மாண்டமான ஒரு நூலகத்தை கட்ட வேண்டும் என்ற எண்ணம் அவருள் தோன்றியது. எகிப்த்தியர்கள் பாப்பிரஸ் தாள்களில் எழுதி வந்த அந்தக்காலத்தை அலெக்ஸாண்டர் சாதுர்யமாக பயன்படுத்திக்கொண்டார், இதனைத் தொடர்ந்து எகிப்த்திலுள்ள அலெக்ஸாண்ட்ரியா நகரில் இதற்கான ஆயத்த பணிகள் துவங்கப்பட்டது. உலகம் முழுவதிலும் கல்வி, கலை, இலக்கியம், கணிதம், அறிவியல், மருத்துவம் ஆகிய துறைகளில் இருந்து சிறந்த நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை கிரேக்கத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பாப்பிரஸ் தாள்களில் எழுதப்பட்டது.

பணிகள் துவங்கிய சிறிது காலத்திலேயே அலெக்ஸாண்டர் இறந்து போனாலும் அலெக்ஸாண்டரின் நெருங்கிய நண்பரும் அப்போதைய எகிப்தின் அரசருமானதலாமி (Ptolemy I; கி.மு.305 - கி.மு.282) முன்னின்று பணிகளை மேற்பார்வையிட்டு நிறைவு செய்தார். இறுதியாக கி.மு.300-ல் எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நகரில் ஏழு லச்சதிற்க்கும் அதிகமான பாப்பிரஸ் தாள்களை கொண்ட முதல் பொது நூலகம் அமைக்கப்பட்டு The Royal Library of Alexandria என்று பெயரிடப்பட்டது.

அதன் பிறகு ஆக்ஸ்போர்டு போன்ற புகழ் பெற்ற பல்கலைக்கழகங்கள் நூலகத்தின் பயன்பாடுகளை அறிந்து தங்களது பல்கலைக்கழக வளாகங்களிலிலேயே நூலகங்களை நிறுவத்தொடங்கின. அதன் பிறகு நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக நூலகங்கள் பல்வேறு மாற்றங்களை சந்தித்து தன்னை வளர்த்துக்கொண்டு ஒரு புதிய பரிணாமத்தை அடைந்தது.

நன்றி - வரலாற்று சுவடுகள்.

எழுதியவர் : (25-Jul-17, 9:27 am)
பார்வை : 962

மேலே