எதிர் காலம் உனதடா

அன்பு உனக்கு வேண்டும் - தீதை
அறிந்து வாழ்தல் வேண்டும்
துன்பம் போக்க வேண்டும் - ஏழை
துயரில் எண்ணம் வேண்டும்

பொய்கள் கூற வேண்டாம் - மற்றோர்
புறமும் பேச வேண்டாம்
மெய்யாய் இருத்தல் வேண்டும் - பெற்றோர்
மேன்மை உணர்தல் வேண்டும்

கல்வி கேள்வி அதிலே - உனது
கவனம் இருக்க வேண்டும்
அல்லும் பகலும் தொழுது - இறைவன்
அருளில் நாட்டம் வேண்டும்

மனிதர் யாவும் ஒன்று - இதனை
மதித்து வாழ்தல் நன்று
இனிய குணங்கள் கூட்டு - எதிலும்
எளிமை வாழ்வில் காட்டு

கோபம் வேண்டாம் உனக்கு - கெட்ட
கூட்டும் வேண்டாம் உனக்கு
பாபம் கெடுதல் வேண்டாம் - வாழ்வில்
பாதை பிறழ்தல் வேண்டாம்

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (25-Jul-17, 2:20 pm)
பார்வை : 147

மேலே