பாடல்

பல்லவி

என்கண்மணி எனது இமை உறவாடத் தேடுகின்றேன் /
என்கண்ணிமை தொலைத்துவிட்டு உன்னிடமே நாடுகின்றேன் /
நீயாக வந்தென்னை நெருங்காமலே
நிழலாடும் உன்மேனி ஏனோ /
நீயென்றும் நானென்றும் தெளியாமலே
நெஞ்சங்கள் நின்றாடும் தானோ /
காய் இன்று தான் கனியாகுமோ
கனி யாவும் நிலையாகுமோ /

( என்கண்மணியே ... )

சரணம் -- 1

இன்று பொன்மேனி நெருங்கிட கொஞ்சம் கொஞ்சம் /
புன்னகை பூக்குது கொஞ்சம் /
சென்று வந்திட்ட பாதையில் நெஞ்சம் நெஞ்சம் /
மதிமுகம் தேடுது நெஞ்சம் /
பித்தம் பிடிப்பிடிக்கும் காதல் பற்றிடும் தீயினைப் போல /
மொத்தம் உனைநினைக்கும் ஊடல் மயங்கிடும் மேகத்தைப் போல /
என்மேனிதான் என்ன வாகுமோ /
செங்கல் சூளையில் தீ பற்றும் பொழுது
செங்கல் சூளையென மாறினள் பெண்ணும் /

( என்கண்மணியே ... )

சரணம் -- 2

உன் விழியீர்ப்பு விசையினில் தேகம் தேகம் /
உன்கண்ணில் நான் தேய்ந்து போனேன் /
உன் கண்ணோடு நான் வந்த நேரம் நேரம் /
என்கண்ணில் நான் தேய்ந்து போனேன் /
என்னை அறிந்து கொண்டேன் அந்த
இடத்தினில் உயிரில்லை உயிரில்லை /
உன்னை மறந்து விட்டால் அந்த
இதயத்தில் மூச்சில்லை மூச்சில்லை /
இது நிஜமா இல்லை நிழலா /
என்னை வருடி மெய்தனை உணர்ந்தேன் /
உன்னை கண்டெந்தன் வாய்மொழி மறந்தேன் /

( என்கண்மணியே ... )

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (25-Jul-17, 4:54 pm)
Tanglish : paadal
பார்வை : 75

மேலே