நீ மலைடா - நீ காடுடா

என்னடா ஏழு கழுதை வயசு ஆகுது. நீங்க ரண்டு பேரும் " நீ மலைடா" -ன்னு அவனச் சொல்ல, அவன் உன்ன "நீ காடுடா" -ன்னு மாறி மாறிச் சண்டை போட்டு இருக்கறீங்க. ஏண்டா பேரப் பசங்களா, இந்த தொண்ணூறு வயசுக் கெழவியைக் கொஞ்சம் அமைதியா தூங்கவிடுங்கடா.
😊😊😊😊😊
பாட்டிம்மா, நீங்களே பிப்பினக்(Bipin) (forest) கண்டுச்சு வையுங்க. எம் பேரு 'கிரி' (Giri) தானா?
☺☺☺☺☺☺
அதிலென்னா சந்தேகம் கிரி (Kiri)?
😊😊😊😊😊
இந்த பிப்பினு இந்தி ஆசிரியர்கிட்ட எம் பேருக்கு என்ன அர்த்தம்னு கேட்டானாம். அவுரு 'கிரி' -ன்ன 'மலை' -ன்னு (mountain/peak) சொன்னராம். அதிலிருந்து என்ன இந்தப் பிப்பின்னு என்ன "மலை, மலை" -ன்னு கூப்படறாம் பாட்டிம்மா.
😊😊😊😊😊
இந்த மலை மட்டும் என்ன செஞ்சானு தெரியுமா பாட்டிம்மா. அதே இந்தி ஆசிரியர்கிட்ட எம் பேருக்கு அர்த்தம்னு கேட்டனாம். அவுரு பிப்பின்-னா 'காடு' -ன்னா சொன்னாராம். அதிலிருந்து என்னப் பாக்கற போதெல்லாம் இந்த மலை என்னக் 'காடு' 'காடு' -ன்னு கூப்படறாம் பாட்டிம்மா.
😊😊😊😊😊😊
ஏண்டா பசங்களா, உங்க பேருக்கான அர்த்தம் தெரிஞ்சிருந்தா உங்க அப்பனும் ஆத்தாளும் இந்தப் பேருங்கள உங்களுக்கு வச்சிருக்கமாட்டாங்க. உங்க நண்பர்களுக்கு இது தெரிஞ்சா ஒவ்வோருத்தனும் உங்க ரண்டு பேரையும் காடு, மலை -ன்னா கூப்பட ஆரம்பிச்சிருவாங்க. நீங்க உங்களுக்குப் பிடிச்ச அர்ததம் தெரிஞ்ச பேருங்கள முடிவு பண்ணீட்டு ஒரு வழக்குரைஞரப் (வக்கீல) பாத்துப் பேசினா உங்க பேருங்கள மாத்த வேண்டிய ஏற்பாட்டைச் செய்வாரு. போங்கடா. போயி வேலையப் பாருங்கடா
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 திரைத் தமிழைத் தவிர்ப்போம். கற்றோர்க்குரிய நற்றமிழை வளர்ப்போம்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழியுணர்வை வளர்க்க.
◆◆◆◆●●●●●●◆■■■◆◆◆◆◆◆●●●◆■■■■◆◆indiachildnamescom

எழுதியவர் : மலர் (25-Jul-17, 7:50 pm)
பார்வை : 165

சிறந்த நகைச்சுவைகள்

மேலே