காதல் பார்வை

மல்லிகைத் தோட்டத்து மலர்களைவைத்து மங்கை உருவில் கோர்க்கப்பட்ட முழுநீள மாலைபோல்
அவள் நடந்துவர........

தவம்பல புரிந்து தெய்வங்கள் கண்ட தவசிகள் கொண்ட உலகில்....
வேள்வியே செய்யாது வானதேவியைக் காண்கிறோமே என்ற
மயக்கத்தில்........
வீட்டுவாயிலில் நான் பேதளித்து நிற்க.....

என்னைக் கண்டதும் நின்றாள்....
பேசினாள்...இல்லை இல்லை...
பாடினாள்...
அந்த உரையின் ஊடே....
அவளைப் பற்றி இயற்றிய கவிதை நினைவுக்குவர....
அவளிடம் கூறினேன்....

அவளோ......
நாணத்தால் நாணேற்றி என்னைக் கொன்றுவிட்டு....
அந்நாணம் பெற்றெடுத்தப் புன்னகையால் கொலையுண்ட என் மனதிற்கு மீண்டும் புத்துயிர் அளித்துவிட்டுத்.....
தரைமீது பார்வை பதித்துக்கொண்டாள்.....
ஒன்றும் தெரியாதவள்போல்...

நானும் தரையைப் பார்த்தேன்...
அப்போதுதான் அந்த அதிசயத்தையும் பார்த்தேன்....
"சாலை கண்ணாடியாகியிருந்தது".....

"இது எப்படி நிகழ்ந்தது!!!"...
வியப்பின் வீரியத்தால் விண்ணைத்தொடும் அளவிற்கு உயர்ந்திருந்த என் விழிமேல் குடிகொண்ட புருவங்கள் வீடுதிரும்புவதற்குள்.....
"வருகிறேன்" என்றுகூறி
விடைபெற்றுச் சென்றாள்.....

இருப்பினும்....
வியப்பாலும் குழப்பத்தாலும் செய்யப்பட்ட ஒரு புது உணர்வு
ஆர்வத்தைத் தூண்ட....
தரையைப் பார்க்க மனம் தாண்ட.....
சாலையை நோக்கினேன்...மீண்டும்.....
இப்போது உணர்ந்தேன்....
"அட.....நம் இல்லத்து வண்ணக் கோலமா இது!!!!! "......

எழுதியவர் : மகேஷ் லக்கிரு (26-Jul-17, 8:48 am)
சேர்த்தது : மகேஷ் முருகையன்
Tanglish : kaadhal parvai
பார்வை : 283

மேலே