காதல்

ஆடியிலும் மண்ணுருக காய்ந்தது வெய்யல்
அப்படியொரு புழுக்கமும் தந்தது வியர்வையாக
அந்தி சாயும் வேளை எங்கிருந்தோ வாடை வீச
வான் இருண்டது எங்கிருந்தோ வந்த கார்மேக கூட்டம்
வானைப் போர்த்திட திடீரென்று
மேகப் போர்வையும் கிழிந்து
கொட்டியது மழை மண் வாடை வீசிட

எந்த மன்னன் எப்போது நட்டு வைத்தானோ தெரியாது
அந்த நெடும் சாலை ஓரம் தழைத்தோங்கி நின்றிருந்தது
நிழல் தரும் மாபெரும் ஆல மரமும் -தங்குமிடம் இங்கே வா
என்று என்னை அழைக்க என் இரு சக்கர வாகனம் சூழ
அதன் அந்த ஆலமரத்தடியில் தஞ்சமடைந்தேன்

சற்று நேரத்திற்கெல்லாம் தப்பி தட்டி எப்படியோ
அந்த கொட்டும் மழையில் மேனி நனைந்து
இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த நங்கை ஒருத்தி
தஞ்சம் என்று வந்தடைந்தாள் என் பக்கம் ஆங்கு

அச்சோ அவள் அழகை என்னென்று சொல்வேன்
நனைந்த மேனியால் அவள் தங்கமென தக தகக்க
கொஞ்சும் அவள் இளம் அங்கங்கள் மழை நீரால்
ஒளிந்தும் ஒளியாமலும் கண்களை சற்றே கவர்ந்தாலும்
மங்கை அவள் வெட்கி தலை குனிந்து நாணத்தால்
செய்வதறியாது கைகளால் அங்கத்தை மறைக்க
கிறுக்கேறிய என் மனம் இப்போது என் சிறுமையை உணர்ந்தது
விரைந்து சென்று என் இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த
துவாலை எடுத்து வந்து அவளுக்கு அளித்தேன் அந்த
அவள் மேனியை மறைத்துக் கொள்ள -இப்போது நான்
அவளை முதல் முறையாய் என் கண்கொண்டு பார்த்தேன்
அவள் கண்களும் என் கண்களை நன்றி கலந்த பார்வையோடு
நோக்க அது என் மனதை என்னவோ செய்தது
அது என்னை அறியாமல் எனக்கு அவள்மேல் வந்த
காதல் என்று இப்போது உணர்ந்தேன்

அடுத்த நாள் தற்செயலாய் அவளை அதே இடத்தில்
பார்த்தபோது அவளிடம் நாணம் இருந்தது வெட்கம் இல்லை
அது என்மேல் காதல் ஆனது

இது ஒரு மழை தந்த காதல் கதை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-Jul-17, 7:56 pm)
Tanglish : kaadhal
பார்வை : 193

மேலே