அன்பை விதையுங்கள்

அன்பை விதையுங்கள்

கனிவாய் இதயம் பிசைந்து
கருணை நீர் சேர்த்து
உண்மை உட்கொண்ட உருண்டைகளாய்
திசையெட்டும் அன்பை விதையுங்கள்

வீசிய விதைப்பந்துகள் அவை
பிடிப்பான இடம்சேர்ந்து விருட்சமாவதுபோல்
பாசமும் கிளைவிரித்து விருட்சமாக
அன்பை விதையுங்கள் - அது
அகிலத்தின் அகம் ஆகட்டும் ..

-மூர்த்தி

எழுதியவர் : மூர்த்தி (27-Jul-17, 1:05 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
பார்வை : 96

மேலே