சுவையாகி வருவது- 2 -------- தொடர்ச்சி

வண்ணதாசனின் கதைகள் வெளிப்படுத்தும் சுவை மூன்று தளங்களில் அமைந்திருப்பதைக் காணலாம். முதன்மையாக மனிதர்கள். அடுத்ததாக இடங்கள். மூன்றாவதாக பருவம். இவற்றில் மனிதர்களைத் தவிர்த்த பிற இரண்டும் பெரும்பாலும் மனிதர்களைக் குறித்த சித்தரிப்பின் பின்புலமாகவே அமைகின்றன. நிலம் மனிதர்களை ஏந்தி கண்ணருகே காட்டும் ஒரு உள்ளங்கை மட்டுமே அவருக்கு. பருவம் என்பது அத்தருணத்தின் உணர்வு நிலைக்கு அழகு கூட்டும் ஒரு சூழல்.

ஆகவே நிலச்சித்தரிப்பு அவருடைய புனைவுகளில் வெவ்வேறான வகைபேதங்களுடன் பெரும்பாலும் வருவதில்லை. மீண்டும் மீண்டும் சாலைகள்தான் அவரது கதைகளின் பின்புலக்காட்சிகளாக வருகின்றன. மெல்ல நடந்து போகும் ஒருவனின் அலையும் கண்களுக்கு முன் தன்னைக் காட்சியாக்கும் சாலையோரப் பொருட்களே வண்ணதாசனின் புனைவுலகில் நுழைகின்றன. கடையோரங்கள்,தலைச்சுமையர்கள், வழிப்போக்கர்கள். அபூர்வமாகவே ஓர் அருவியும் நான்கு சிரிப்பும் போன்ற கதைகளில் குற்றாலத்தின் நீர்க் கொப்பளிப்பும் மானுடச் சுழிப்பும் வெளிப்பட்டிருக்கிறது.

திருநெல்வேலி நகரத்தின் ஒரு சில பகுதிகளின் காட்சிப் பதிவு என மேலோட்டமாக இவை தோற்றமளிக்கின்றன. ஆனால் அவரது பார்வை எவற்றைத் தொட்டெடுக்கிறது எவற்றை விட்டுவிடுகிறதென்பது எப்போதும் முக்கியமானது.வண்ணதாசனின் பார்வையில் படியும் நிலமென்பது அந்நிலத்துடன் பிணைந்த ஏதோ மனிதரால் அடையாளப்படுத்தப்பட்டதாக அவருக்குரியதாக மட்டுமே தன்னைக் காட்டிக் கொள்வதாக இருக்கும். கூடை முடையும் ஒருவர் அமர்ந்திருக்கும் இடம் அவரால் அர்த்தப்படும். செருப்பு தைக்கும் ஒருவரின் இடம் அவருக்குரியது. வண்ணதாசனின் காட்சிப்புலம் எப்போதும் அம்மனிதர்களின் இயல்பைத் தான் வாங்கிக் கொள்ளும்.ஜுடி அன்னத்தை பார்க்கப்போகிறவன் [போய்க்கொண்டிருப்பவள்] சாக்கடையிலும் அபாரமாக மின்னும் ஒரு சரிகையை பார்த்துக் கொண்டு செல்கிறான் [கன்னங்கரேல் என்று சிறு சிறு குமிழ்களுடன் அசைவே அற்றுப் பல வருடங்களாகக் கிடப்பது போன்று தோன்றுகிற அந்தச் சாக்கடையைத் தொடர்ந்து போனாவே ஜூடி வீடு வந்து விடும்] காட்சிகள் சித்தரிக்கப்படுவதில் வண்ணதாசன் என்னும் ஓவியரின் கண்ணும் கையும் தொழில்படுகின்றன. முதன்மையாக காட்சிகளில் உள்ள ஒளியையும் வண்ணத்தையும்தான் அவை குறிப்பிடுகின்றன. அதன் பிறகுதான் வடிவங்கள்.

இக்காட்சிகள் அனைத்தும் மிக ஆர்வமூட்டும் ஒரு தனித்தன்மை கொண்டுள்ளன. ஒரு பொருள் இரு பின்புலங்கள் கொண்டது. ஒன்று அதன் பயன்பாட்டுத்தளம். இன்னொன்று அது பிற பொருட்களுடன் கொண்டுள்ள உறவு. இது இரண்டிலிருந்தும் அப்பொருளைப் பிரித்தெடுத்து வண்ணமும் வடிவமும் மட்டுமாக நிறுத்தும் ஒரு தன்மை வண்ணதாசனின் சித்தரிப்புகளுக்கு உண்டு. இதை தான் ஓவியனின் கண் என்று சொன்னேன்.சாலையோரத்தின் கிடக்கும் ஒரு சிகரெட் அட்டை அதன் தோற்றத்தாலும் அழகாலும் மட்டுமே கதைக்குள் இடம் பெறுகிறது. ட்ராலியில் சீராக நகரும்ம் ஒளிப்பதிவுக் கருவியால் பதிவு செய்யப்பட்டுக்கொண்டே இருக்கும் புறக்காட்சிகள் போல.

இவ்வாறு பொருளின் இரு பின்புலங்களையும் வெட்டிவிடுவதின் வழியாக தான் சித்தரிக்கும் மொழிப்புலத்திற்குள் தன்னுடைய காட்சி எல்லைக்குள் அப்பொருள் தன்னிச்சையாக இருந்து கொண்டிருக்க வண்ணாதாசன் அனுமதிக்கிறார். பொருளின் பல்வேறு அர்த்த சாத்தியங்கள் அகற்றப்படுவதால் ஜுடி அன்னத்தை பார்க்கப்போகிறவன் [போய்க்கொண்டிருப்பவள்] சாக்கடையிலும் அபாரமாக மின்னும் ஒரு சரிகையை பார்த்துக் கொண்டு செல்கிறான் [கன்னங்கரேல் என்று சிறு சிறு குமிழ்களுடன் அசைவே அற்றுப் பல வருடங்களாகக் கிடப்பது போன்று தோன்றுகிற அந்தச் சாக்கடையைத் தொடர்ந்து போனாவே ஜூடி வீடு வந்து விடும்] காட்சிகள் சித்தரிக்கப்படுவதில் வண்ணதாசன் என்னும் ஓவியரின் கண்ணும் கையும் தொழில்படுகின்றன. முதன்மையாக காட்சிகளில் உள்ள ஒளியையும் வண்ணத்தையும்தான் அவை குறிப்பிடுகின்றன. அதன் பிறகுதான் வடிவங்கள்.

இக்காட்சிகள் அனைத்தும் மிக ஆர்வமூட்டும் ஒரு தனித்தன்மை கொண்டுள்ளன. ஒரு பொருள் இரு பின்புலங்கள் கொண்டது. ஒன்று அதன் பயன்பாட்டுத்தளம். இன்னொன்று அது பிற பொருட்களுடன் கொண்டுள்ள உறவு. இது இரண்டிலிருந்தும் அப்பொருளைப் பிரித்தெடுத்து வண்ணமும் வடிவமும் மட்டுமாக நிறுத்தும் ஒரு தன்மை வண்ணதாசனின் சித்தரிப்புகளுக்கு உண்டு. இதை தான் ஓவியனின் கண் என்று சொன்னேன்.சாலையோரத்தின் கிடக்கும் ஒரு சிகரெட் அட்டை அதன் தோற்றத்தாலும் அழகாலும் மட்டுமே கதைக்குள் இடம் பெறுகிறது. ட்ராலியில் சீராக நகரும்ம் ஒளிப்பதிவுக் கருவியால் பதிவு செய்யப்பட்டுக்கொண்டே இருக்கும் புறக்காட்சிகள் போல.இவ்வாறு பொருளின் இரு பின்புலங்களையும் வெட்டிவிடுவதின் வழியாக தான் சித்தரிக்கும் மொழிப்புலத்திற்குள் தன்னுடைய காட்சி எல்லைக்குள் அப்பொருள் தன்னிச்சையாக இருந்து கொண்டிருக்க வண்ணாதாசன் அனுமதிக்கிறார். பொருளின் பல்வேறு அர்த்த சாத்தியங்கள் அகற்றப்படுவதால் தன் பொருள்தன்மையின் மூலமே அவை நம்மிடம் உரையாடியாக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்குகிறார். அது அளிக்கும் புதிய சாத்தியங்கள் தான் வண்ணதாசனின் காட்சி உலகம் என்று சொல்லலாம். வெவ்வேறு கதைகளிலிருந்து இதை உணரும் பத்திகளை வாசகன் தொட்டெடுக்க்கலாம்.

இவ்வாறு பொருள்வயப் பின்புலமாக மட்டுமே வண்ணதாசனின் நிலம் கதைகளுக்குள் காட்சியாகிறது. திரைமொழி அறிந்த ஒரு வாசகன் பெரும்பாலும் அண்மைக்காட்சிகளால் ஆன சித்தரிப்பு என்று இவரது கதைகளைச் சொல்லிவிடமுடியும். விரிந்த நிலக்காட்சி அனேகமாக இக்கதைகளில் இருப்பதில்லை. ஒட்டுமொத்தமாக ஒரு தெருவையோ ஒரு கட்டிடத்தையோ கூட வண்ணதாசனின் கதை சென்று தொடுவதில்லை. ஏனெனில் விரிந்த காட்சிகள் என்பவை வெளியின் சித்திரங்கள். அவை பொருட்களின் பெருந்தொதொகுப்பு. வண்ணதாசனின் நிலம் தனிப்பொருட்களால் ஆனது காடென ஒன்று அவர் படைப்புகளில் எழுவதில்லை. மலர் சூடி நின்றிருக்கும் சிறிய செடிகளே முகம் கொள்கின்றன.

இத்தகைய அவதானிப்புகள் ஒரு கலைஞனென்ற வகையில் வண்ணதாசனின் உள்ளத்திற்குள் நாம் செல்வதற்கு பெரிதும் உதவக்கூடிய பாதைகளை அமைக்கின்றன. தேனுண்ணிகள் மலர்கள் கொண்டுள்ள வெவ்வேறு வகையான தோற்றங்களுக்கேற்ப உருமாறி உள்ளே செல்வதை பார்க்கிறோம். முற்றிலும் தலைகவிழ்ந்து நிற்கும் மலர்களும் உண்டு. தேனுண்ணி பறந்தபடியே கவிழ்ந்து அவற்றுக்குள் நுழைகிறது. புனைவுக்குள் நுழையும் வாசகன் கொள்ள வேண்டிய பாவனைகளை அவ்வெழுத்தின் கலைசார் பாவனைகள் தீர்மானிக்கின்றன. மிகச்சிறிய நுண்மைகள் வழியாக தன்னையே நுண்மையாக்கிக் கொண்டு மட்டுமே ஒரு வாசகன் வண்ணதாசனுக்குள் நுழைய முடிகிறது

என்ன காரணத்தினால் வண்னதாசனின் புனைவுகளுக்குள் கடந்த காலம் வரலாறோ இல்லையோ அதே காரணத்தினால்தான் அவரது படைப்புகளில் விரிந்த நிலக்காட்சிகளும் இல்லை. எல்லையை மேலும் மேலும் குறுக்குவதினூடாக நுண்மை நோக்கிச் செல்லும் சுவைசார்ந்த பயணம் அவருடைய படைப்புலகம். அவருடைய படைப்புகளில் நாம் காணும் மிக நுணுக்கமான ஓர் உள அசைவு அல்லது நிகழ்வுமாறுபாடு என்பது பிற அனைத்தையும் ரத்துசெய்துவிட்டு நம்மைக் கூர்மையாக்கிக்கொண்டு முன்செல்வதன் வழியாக நாம் அறியும் ஒன்று.

இதே காரணத்தினால்தான் பெரும்பாலும் சிறிய கவிதைகளும் கவிதைக்கு அருகே செல்லும் சிறுகதைகளும் மட்டுமே அவரால் எழுதப்பட்டுள்ளன. விரிந்த புலத்தில் காலம் மடிப்புகளாகவும் அலைகளாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் ஒரு பெரிய படைப்பை எழுதுவதற்கான தூண்டுதலை அவர் பெற்றதில்லை. துண்டுபடுத்தப்பட்ட காலத்திற்குள் நிகழும் வாழ்க்கையே அவருடையது. பனித்துளிக்குள் தெரியும் பனை என்று சொல்லலாம்.

இவ்வியல்பால் தான் அவரது படைப்புகள் பெரும்பாலும் குறைத்துச் சொல்லி வாசகனை ஊகிக்க விட்டு நின்றிருக்கும் அமைதி கொண்டுள்ளன. அவர் சொல்ல விரும்பும் அனைத்தும் எதுவும் நிகழாத அன்றாட வாழ்க்கைக்குள் அமைந்தாகவேண்டும் எனும்போது அவை குறிப்புணர்த்தலாகவே நிகழ முடியும். எனவேதான் வண்ணதாசனின் பல கதைகள் கதைக்குள் மறைக்கப்பட்ட கதை கொண்டவையாக உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு ”நீ இப்போது இறங்கும் ஆறு” என்னும் கதை குறித்து சுஜாதா ”மிகத்திறமையாக ஒரு கதை ஒளித்து வைக்கப்பட்டுள்ள கதை” என்று சொன்னார். கணிசமான கதைகளுக்குள் இந்த வரையறை பொருந்தும்.

எப்போதும் அவருடைய கூறப்பட்ட கதைகளுக்குள் உணர்த்தப்படும் வேறு கதை ஒளிந்திருக்கும். இந்த வகையான நுண்சித்தரிப்புக்குள் பெரிய கதைகள் அவ்வண்ணமே திகழ முடியும். பொற்கொல்லன் தன் நுண்கிடுக்கியால் தொட்டெடுத்து வைக்கும் ஒரு சிறு பொன்மணி போன்றவை அவருடைய கதைகள். அவை எங்கு சென்று அமையும் என்று ஊகிக்கும் ஒரு வாசகன் அந்த முழு நகையையும் தன் கற்பனையால் காண முடியும். இங்கிருந்து அங்கு செல்லும் வாசகனுக்குரியவை அக்கதைகள்.

அவரது கதைகள் அளிக்கும் அனுபவம் என்பதும் அந்த கணம் விரியும் தருணங்கள்தான்.அவ்வகையில் பார்த்தால் வண்ணதாசனின் நிலக்காட்சிகள் அனைத்தும் அகன்ற பெருநிலத்தை குறிப்புணர்த்தும் சிறிய நிலச்சித்தரிப்புகள்தான். சிறுமலர் சூடி நிற்கும் இச்செடி அது நின்றிருக்கும் பெருநகரத்தை தன் கற்பனையால் விரித்துக் கொள்ளும்படி வாசகனுக்கு சொல்கிறது.

வண்ணதாசனின் பருவ சித்தரிப்புகள் பெரும்பாலும் அவருடைய கற்பனையுலகிலிருந்து எழுபவை. மிக அரிதாகவே மழை பெய்யும் பாளையங்கோட்டை அவர் காட்டும் சித்தரிப்புகளில் ஒப்பு நோக்க அதிகமான மழையும் ஈரமும் கொண்டதாக இருப்பதை வண்ணதாசனின் கதைகளைப் படிப்பவர்கள் அறியலாம். அது வண்ணதாசன் தன் புனைவுலகின் மேல் பரப்ப விரும்பும் ஈரம் மட்டுமே. முன்பனிக்காலத்தின் குளிரும் முதல் மழைக்காலத்தின் ஈரமும் கொண்டவை அவரது சூழல்கல். அரிதாக தகிக்கும் கோடை சித்தரிக்கப்படும்போது கூட வீட்டுக்குள் நுழைவதன் குளிர்ச்சியும் இளங்காற்றின் தழுவல் அளிக்கும் சிலிர்ப்பையும் அவரது கதைகள் சித்தரிக்கின்றன.

பருவச் சித்தரிப்புகளின் ஊடாக வண்ணதாசன் அவர் உருவாக்கும் கதை மாந்தர்களின் உணர்வுகளுக்கு மெல்லிய அடிக்கோடொன்றை இடுகின்றார் அவருடைய கதைகள் அன்றாட வாழ்க்கையில் எளிய நகர்சார் சூழலில் மிகச்சாதாரணமான மானுடர்களுக்கு நிகழ்பவை. அவற்றில் கற்பனாவாத அம்சத்திற்கு இடமே இல்லை. வண்ணதாசன் புனைவுலகம் எப்போதுமே கறாரான இயல்புவாதச் சித்தரிப்பாலானது. ஆனால் அதன் மேல் பருவகாலத்தின் ஈரச்சம் படரவிடுவதன் வழியாகவே அவர் அதை நெகிழச் செய்கிறார். அச்சித்திரங்கள் அப்பருவத்தால் மேலதிக அர்த்தம் அளிக்கப்படுகின்றன. அவர் புனைவுலகில் குறைவாகவே சித்தரிக்கப்படும் கசப்புக்கு அவை இளைப்பாறலாக ஆகின்றன.

எழுதியவர் : (27-Jul-17, 7:50 pm)
பார்வை : 102

மேலே