நிலவு

இருண்டு விட்ட விண்வெளி வீட்டின்
வானத்து மங்கையின் கருவறையில்
பிரசவித்த வெளிச்சத்தின்
முதல் குழந்தை !!
நாம்
கேட்டு வளர்ந்த
ஆயிரம் கதைகளுக்கும்
ஒரே சாட்சி
இந்த நிலவு மட்டும் தான் !!
இரவில் நிகழும்
ஆயிரம் இன்பத்திற்கும்
துன்பத்திற்கும்
காவல்காரன் இந்த நிலவு தான்!!
ஆயிரம் கைகளில்
ஆதவன்
மறைவதில்லை
ஆனால்
ஆயிரம் கைகள் விரித்தாலும்
அது நிலவுபோல்
மிளிர்வதில்லை!!
மழையும் நிலவும்
ஒன்றுதான்!
ஏன்?
அவைகள் ஓர் தாயின்
கருவறையின்
இரு செல்வங்கள்
மழை கூட
மக்களுக்கு சிலமுறை தான்
முகம் காட்டுகிறது
ஆனால்
நிலவோ வானத்து
பூங்காவின் நடுவில்
வாலிபம் குறையாமல்
இன்றும் மக்களோடு
கதை பேசுகிறது!!
நீரும் நிலவும்
இந்த
நிலத்தின்
பசியை போக்க வந்தவைகள்!!
தன் மகன் உண்பதை
கண்டு மகிழ்பவள்
தாய் மட்டுமல்ல
இந்த
நிலவும் தான்!!
நீரின்றி புவி இல்லை
நிலவின்றி கவி இல்லை
ஏன்?
இங்கு கவிஞர்களும்
கதை பேராசிரியர்களும்
பள்ளிக்கூடமும்
பாசறையும்
கூட இல்லை!!
நிலவு!
நம் கண்ணில்
பட்டுத் தொலைகிற
கருப்பு வைரத்தின்
ஒளிக் கீற்று!!
இரவு கட்டிவிட்ட
இந்த தொட்டிலில்
உறக்கம் என்ற
மதுவை உண்டு
நாம்
மயங்கினாலும்
உறவு என்று சொல்லி
அன்பாய்
தாலாட்டுவது
நிலவன்றி வேறில்லை..!!

எழுதியவர் : ரகுபதி (28-Jul-17, 9:21 am)
சேர்த்தது : கவிதை தாசன்
Tanglish : nilavu
பார்வை : 283

மேலே