மக்கு

பத்தாம் வகுப்பு இரண்டாவது பீரியட், சயின்ஸ் மிஸ் உள்ள வர்ராங்க. ராமனுக்கு வயிறு கலக்க ஆரம்பிச்சிது, இன்னைக்கி என்ன கேள்வி கேக்க போறாங்களோ என்று.
கூட படிக்கிற பசங்கள விட ராமனுக்கு வயசு அதிகம், அப்படின்னா அவன் எத்தனை முறை பெயில் ஆயிருப்பான்னு பாருங்க. ஆனா எப்படியோ பத்தாம் வகுப்பு வந்துவிட்டான்.

மிஸ் பாடத்தை ஸ்டார்ட் பண்ண ஆரம்பிச்சாங்க. பீரியட் முடிய பத்து நிமிஷம் முன்னாடி கேள்வி நேரமும் ஆரம்பிச்சிது.

மிஸ் கேட்ட கேள்விக்கு நல்லா படிக்கிற பசங்க எப்போதும் போல பதிலை உடனுக்கு உடனே சொன்னாங்க.

ராமனுக்கு ரொம்ப நாள் ஆசை நாமளும் ஒரு முறையாவது பதில் சொல்லி பாராட்டு வாங்க வேண்டும் என்று. ஆசை இருக்கலாம் ஆனா பதில் தெரியனும்ல. உடனே அருகில் அமர்ந்து கொண்டு இருக்கும் செல்வா என்ற பயனிடம் உதவி கேட்கிறான். அடுத்த கேள்விக்கு உனக்கு பதில் தெரிந்தால் அதை எனக்கு சொல், நான் பதில் சொல்கிறேன் என்று கூறினான். அதற்கு செல்வாவும் சம்மதித்தான்.

சயின்ஸ் மிஸ்ஸோட அடுத்த கேள்வி, சலஃயூரிக் ஆசிட் போர்முலா என்ன?

செல்வா பேச்சை கேட்டு ராமனும் தன் கையை உயர்த்தினான். மிஸ்ஸுக்கு ரொம்ப ஆச்சரியம், எந்த கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல தெரியாத மக்கு ராமண்ணா இன்னைக்கு கை உயர்த்தியது. எல்லோரும் ராமனுக்காக ஒரு முறை கை தட்டுங்க, அனைத்து மாணவர்களும் ராமனுக்காக சந்தோசமாக கரகோசங்களை எழுப்பினர்.

செல்வா சொன்ன பதிலை மிஸ் கிட்ட சொன்னான் ராமன். மிஸ் நீங்க கேட்ட கேள்விக்கு பதில் கஜினி முஹம்மத். பதிலை கேட்டதும் மிஸ்ஸுக்கு ரொம்ப கோபம்.

டேய் லூசு சயின்ஸ்ல பதில் கேட்டா சோசியல் சயின்ஸ் பாடதுல இருந்து பதில் சொல்றியே மக்கு சாம்பிராணி. உன்னயெல்லாம் படிக்க வைக்க அந்த கடவுளாலேயே முடியாது, அப்படின்னு சொல்லிட்டு மிஸ் கிளாஸ்ஸவிட்டு வெளிய போய்ட்டாங்க.

ராமன் செல்வாவை மொறச்சி பாக்க, அவன் மட்டுமில்லாமல் வகுப்பறையில் உள்ள அனைத்து மாணவர்களும் சிரிப்பு மழையில் நினைந்தனர்.

எழுதியவர் : செல்வகுமார் (28-Jul-17, 1:03 pm)
சேர்த்தது : Selvakumar
Tanglish : makku
பார்வை : 513

சிறந்த நகைச்சுவைகள்

மேலே