அசுரன்

ஓ கோர அசுரா..!!!
தன் கோர பசியில் குந்தி தின்று
செறித்துவிட்டாய்..மலையன பிம்பம் பதித்த என் உரு தரித்த ஓர் அங்க குருதியை நக்கி தீர்தாய்...
அட அகோர அசுரா!!!
நீ பசியாறிய பின்பு அல்லல் படும் மனம் வாட்டி வதம் கொள்கிறது
எத்தனை பொழுதுகளை உரையாடிக் கொன்றோம்
எத்தனை கண்ணீரை புன்னைகைத்து வென்றோம்
உன்னால் நானும் என்னால் நீயும் நற்கதி செய்தோமே..!!!
உன் சடங்கில் என் பங்கு பாதியே
என் இல்ல சடங்கில் என் பங்கே இல்லயே...
மிச்சமின்றி சுவாசித்த புற்று புகையும் தோற்றுத்தான் போயிருக்கும் நம்மில்..!!
கோப்பையில் உறவாடி கோபம் கொண்ட போதும் ஏதும் நினைவில்லையே நம்மை தவிர காலையில்...அசுரா உன் பசி தீர்ந்ததா!!! உன் பசியில் பலியான என் குருதியின் கனம் உரு கொள்ள என் வாலிபத்தை மீண்டு கடக்க வேண்டும்..!!!அசுரா இறக்கம் கொள்..இனி எதிராளனையும் தண்டிக்காதே.!..!!!!

எழுதியவர் : தி.ராமச்சந்திரன் (28-Jul-17, 2:35 pm)
சேர்த்தது : திராமச்சந்திரன்
பார்வை : 217

மேலே