கண் பேசி

கச்சிதமாய் பேசிவிட நினைக்கிறேன்
கணநேரம் போதும் என்று கண் இமைத்துவிட்டு செல்கிறாய்

முறைப்பையன் என்று
முறை தவறிக்கொள்ளவில்லை

பெரும் பேராய் நினைத்துவிடுகிறேன்
என் பெண்மையின் பிறப்பு உனக்கென்று

காதல் கொள்ளும் வயதுவந்தும்
காத்திருக்கத்தான் வைத்துவிடுகிறாய்

பொன்னியின் செல்வன் அவன்
என்னை புலம்பத்தான் வைக்கிறான்

கண்ணை இம்மைத்து
என் கனவையும் திருடுகிறான்

அகதியின் நிலையை அழகாய் உணருகிறேன்
இவன் இங்கு இல்லா நொடியில்

என்னை ஏமாற்றும் கண் என்று தெரிந்தும் பார்க்கிறேன்
உன் ஒருவனால் மட்டும் என்னை ஏமாற்ற முடியும் என்று .............

எழுதியவர் : வான்மதி கோபால் (30-Jul-17, 8:32 pm)
பார்வை : 241

மேலே