எல்லாமும் எனக்கு நீயே

காந்த உடலால் கண்டதும் என்னைக் கலவரம் செய்தாள்
பழரசக் கண்ணால் நின்று பல்வகை மந்திரம் செய்தாள்
பவ்விய நடையில் அசைவில் தந்திரம் பல செய்தாள்
அறியாது அன்றவள் இடையாடை சோர்ந்தாள்
அதனாலே என் நினைவெல்லாம் நின்றவள் ஊர்ந்தாள்
அமுதாய் தேனாய் பழமாய் வந்தெனக்கு
பல்சுவைக் கதம்பமாய் மாறிப் போனாள்
என்னில் இணைந்தவளே என்னுதிரம் கலந்தவளே
பாலும் கசக்குதடி பழரசமும் எனக்கு வெறுக்குதடி
எங்கு நீ சென்றாய் என்னுடலம் நோகுதடி
ஓடி நீ வருவாயா உன்நினைவால் மனம் உருகுகிறேன்
ஆறுதல் தருவதற்கும் அன்புமழை பொழிவதற்கும்
யாரடி எனக்குக் கூறடி நீதானே எனக்குத் தாய் மடி

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (1-Aug-17, 1:53 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 493

மேலே