மூத்தோர்

மூத்தோர் சொல்ல முன்னே நெல்லிக்கனியும் கசக்கும் பின்னே இனிக்கும்,என்பது பழமொழி


நம் முன்னோர்கள் கலை,இலக்கியம்,மருத்துவம்,அறிவியல்,என அனைத்திலும் சிறந்து விளங்கினர் அவர்கள் நல் ஒழுக்கத்தை பேணிக்காத்தனர்,அதை அவர்களின் அடுத்த தலைமுறைக்கும் சொல்லித்தந்து வளர்த்தனர்,

ஓர் அனுவை துளைத்து என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே atom.அனுவைப்பற்றி ஔவையார் தம் பாடலில் கூறியுள்ளார்,அப்படியென்றால் நம் முன்னோர்கள் அறிவியலில் சிறந்து விளங்கியுள்ளனர் அந்த அறிவியலை பக்தியின் மூலம் நம்மையும் பின் பற்றச்செய்தனர் ,

நம் முன்னோர்கள் வேப்பங்குச்சியால் பல் துளக்கினர் இன்று அந்நிய நாட்டவர்களுக்கு வேப்பங்குச்சி பெறுமளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது அவர்கள் பல் துளக்கவும் அவர்களின் மருத்துவத்திற்காகவும்
நம் முன்னோர்களின் சொல்லையும் அவர்களின் வழிமுறைகளையும் நாம் அலட்சியப்படுத்தியதால் மறந்ததால் விளைவு சிறுவயதிலேயே பல் சொத்தை,தீராத வியாதிகள்,

திருக்குறள் தொடாத துறைகளே இல்லை மாணவன் எப்படி இருக்க வேண்டும், மக்கள் எப்படி இருக்க வேண்டும், வணிகர் எப்படி இருக்க வேண்டும் அரசர் எப்படி நாடாள வேண்டும், குடிகள் எப்படி இருக்க வேண்டும், இல்வாழ்க்கையின் மகத்துவம் என்ன? விவசாயி எப்படி நிலத்தை பக்குவப்படுத்த வேண்டும் என்ற அனைத்து வாழ்வியலையும் நம் முன்னோரான திருவள்ளுவர் திருக்குறளின் மூலமாக மக்களுக்கு சொல்லித்தருகிறார், அறச் செய்திகள், அன்பு செய்திகள், ஊர் செய்திகள் மற்றும் போர் செய்திகள் கலந்த கருத்துக் கருவூலமாக இந்நூல் திகழ்கிறது.

மற்றும் 1330 திருக்குறளிலும் தமிழ் என்ற சொல்லே இடம் பெறாமல் தமிழின் பெருமையை உலகுக்கு சொல்லித்தந்தது மற்றுமொரு பெறுமை

இங்கிலாந்து விக்டோரியா மகாராணியாரின் முதல் வேலை காலையில் எழுந்ததும் திருக்குறள் படிப்பது தானாம். காந்தியிடம் நிருபர்கள், உங்களுக்கு அடுத்த பிறவியில் யாராக பிறக்க ஆசை? என கேட்ட போது, தமிழராக பிறந்து திருக்குறளை படிக்க வேண்டும் என்றாராம். இதன் மூல்ம் நம் முன்னோர் நமக்கு எவ்வளவு நன்னைமயை சொல்லித்தருகின்றனர் என்பது என்பது புரிய முடிகிறது,மற்றும் திருக்குறளில் ஜாதி ,மத முமில்லை என்பது நம் முன்னோரின் இன்னும் சிறப்பானது

மற்றும் நாம் எல்லாம் கல்வி கற்கும் போது 1ஆம் வகுப்பில் ஆத்திச்சூடி படித்துத்தான் வளர்ந்திருக்கின்றோம்
உதாரணமாக சில ஆத்திச்சூடிகளைப் பார்ப்போம்

அறம்செய விரும்பு - அறம்(தர்மமான, ந்யாயமான செயல்கள்)
2. ஆறுவது சினம் - கோபத்தை அடக்கு
3. இயல்வது கரவேல் - இயன்ற உதவியை செய்யாமலிருக்காதே
4. ஈவது விலக்கேல் - ஈகையை(தான, தர்மங்கள்)
5. உடையது விலம்பேல் - உன் உடைமைகளைப்(முகநூலிலும்,முகம் தெரியாதவர்களிடமும் ,குடும்ப ரஹஸ்யங்கள் போன்றவை) பற்றி யாரிடமும் சொல்லாதே
6. ஊக்கமது கைவிடேல் - தடைகளைக் கண்டு உற்சாகத்தை விட்டு விடாதே
7. எண்ணெழுத் திகழேல் - அறிவியலாராய்ச்சிக்கு அடிப்படையான எண்ணையும், இலக்கிய வளர்ச்சிக்கு அடிப்படையான எழுத்தையும் இகழாதே. இவற்றைக் கற்றுத் தேர்.
8. ஏற்ப திகழ்ச்சி - யாசிப்பது இகழ்வானது.
9. ஐயமிட் டுண் - பிறர்க்கு உணவிட்டு நீ உண்.
10. ஒப்புற வொழுகு - உலகத்தின் போக்கோடு ஒத்து வாழ்.
11. ஓதுவ தொழியேல் - கல்வி எல்லையில்லாதது. கற்றுக் கொண்டேயிரு.
12. ஔவியம் பேசேல் - கொள் சொல்லாதே
13. அஃகஞ் சுருக்கேல் - அளவைக் குறைத்து விற்பனை செய்யாதே.
14. கண்டொன்று சொல்லேல் - கண்டதை விட்டு வேறொன்றை சொல்லாதே. திரித்துக் கூறுதல்.

இதைத்தான் நாம் அ ஆ க்கு பிறகு பள்ளியில் படிக்கிறோம் இது அனைத்தும் இன்றைய காலத்தவர்கள் பின்பற்ற வேண்டிய ஒன்று என்று தான் பள்ளியில் நமக்கு கற்ப்பிக்கின்றனர் இதுவும் நம் முன்னோர் ஔவையார் நமக்கு சொல்லித்தரும் நன்மை

(கண்டொன்று சொல்லேல் - கண்டதை விட்டு வேறொன்றை சொல்லாதே. திரித்துக் கூறுதல்)முக்கியமாக நம் குழு உறுப்பினர்கள் இந்த ஆத்திச்சூடியை பின் பற்றுவது நல்லது, இந்த ஆத்திச்சூடி கூட நம் குழுவிற்கு பொருந்துகிறதெனில் இதுவும் பெரியோர் கூற்று நன்மைக்கே

என் வீட்டிற்கு பக்கத்தில் ஒரு பாட்டி இருந்தார் அந்த பாட்டி 106 வயது வரை எந்த மருந்து மாத்திரை யும் எடுத்துக் கொண்டதே இல்லை தன் வாழ்க்கயில் ஒரு முறைக்கூட மருத்துவமனைக்கு சென்றதே இல்லை
அந்த பாட்டி 106 வயது வரை மிகுந்த ஆரோக்கியமாக வாழ்ந்தார்,கடைசி வரை அவர் நடக்க ஊன்று கோலின் உதவி கூட தேவைப்படவில்லை தன் கொள்ளுப்பேத்தியின் மகளை யே பார்த்துவிட்டார்,அவர் 106 வயதிலும் கூட தன் வேலையை தானே தான் செய்து வந்தார், கடைசி வரை அவருக்கு இன்னொருவரின் உதவி கூட தேவைப்படவில்லை

இதற்குக் காரணம் அவர்களின் முன்னோர் அவர்களுக்கு சொல்லித்தந்த பழக்கவழக்கங்கள்,வாழ்க்கை முறை,உணவுமுறை,மருத்துவம் , என அனைத்திலும் அவர்களின் முன்னோர்களை அவர்கள் பின்பற்றி வாழ்ந்ததால் ஆகையால் நம் முன்னோர்கள் கூறுவது என்றும் நன்மையே


என் வீட்டிற்கு பக்கத்தில் இன்னொரு பாட்டி இருந்தார் அவருக்கு 95வயது அவரும் கடைசி வரை ஊசி போட்டு கொண்டதில்லை மாத்திரை எடுத்துக்கொண்டதில்லை மருத்துவமனைக்கு ஒரு முறை கூட சென்றதே இல்லை 96 வயது வரை நன்றாக நடந்து ஆரோக்கியமானவராக இருந்தார் அவர் தன் கொள்ளுப் பேரனையே பார்த்து விட்டார்

ஏன் என் பாட்டியின் தாயாரும் கூட அதாவது என் கொள்ளுப்பாட்டி கூட என் குழந்தை பருவம் வரை உயிரோடு நலமாக யாரின் உதவியும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்தார்

இதற்குக் காரணம் அவர்களின் முன்னோர் அவர்களுக்கு சொல்லித்தந்த பழக்கவழக்கங்கள்,வாழ்க்கை முறை,உணவுமுறை,மருத்துவம் , என அனைத்திலும் அவர்கள் முன்னோர்களை அவர்கள் பின்பற்றி வாழ்ந்ததால் ஆகையால் நம் முன்னோர்கள் கூறுவது எனறும் நன்மையே

5000 வருடங்களுக்கு முன்பே பூமி சூரியனை வருடத்திற்கு இத்தனை முறை சுற்றிவருகிறது வருடத்திற்கு 365. நாட்கள் என்று ஒரு தமிழர் அப்போதே கணித்துள்ளார் என்று இதை ஒரு தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான போது நான் பார்த்தேன்

மற்றும் மாயன் நாட்காட்டியிலுள்ள எண்களில் பாதி எண்கள் நம் தமிழ் எண்களே

எகிப்து 40000வருடங்களுக்கு முன்பு அமேசான் காட்டினை விட பசுமைமயாக இருந்தது எகிப்திற்கு முதல் முதலில் குடியேறியவர்கள் தமிழர்கள் ஏனெனில் அங்கு முதன் முதலில் குடியேறிய அரசரின் பெயர் உலகிலேயே தமிழ் பெயரோடு தான் ஒத்துப்போகிறது என்பது விஞ்ஞானிகளின் கூற்று

மற்றும் இன்றும் ஆஸ்த்திரேலியாவில் வாழும் ஒரு இனத்தவர்கள் லூக்காஸ் என்று அழைக்கப்படுகின்றனர் அவர்களின் பழக்கவழக்கங்கள் தமிழர்களோடு ஒத்துப்போகிறது இது நானே கண்டுபிடித்தது

ஆப்ரிக்காவில் வாழும் கேம்ரூன் மக்கள் பேசும் மொழி தமிழ்

மற்றும் 17000 வருடங்களுக்கு முன்பு பூம்புகார் கடல் பகுதியில் ஒரு மிகப்பெரிய நாடே மூழ்கியதாக கண்டறியப்பட்டு அதை இந்திய அரசு ஆய்வு செய்ய முற்ப்பட்டது ஆனால் அதற்க்கு நிறைய செலவு ஏற்றப்படும் என்பதால் அரசாங்கம் அதை கைவிட்டுவிட்டது பின் இங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அவர்களது சொந்த செலவில் பூம்புகார் கடலுக்கடியில் மூழ்கிய நகரத்தை தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்
அதில் அவர்கள் கண்டறிந்தது 17000 வருடங்களுக்கு முன்பு இங்கு வாழ்ந்த மக்கள் நாகரிகத்தின் உச்சக்கட்டத்தில் வாழ்ந்தனர் உலகிலேயே மிகவும் செலிப்பாக வாழ்ந்தனர் என்றும் அவ்ர்கள் ஆரோக்கியமாகவும் ,மகிழ்ச்சிய்கவும் வாழ்ந்தனர் என்றும் அவர்களின் கட்டுமானமும் வியக்கவைப்பதாக
இருக்கிறதென்றும் கூறியுள்ளனர்
இதன் மூலம் நம் முன்னோர்களின் சிறப்பை அறிய முடிகிறது

அலெக்சான்டர் இந்தியாவிற்க்கு வந்த போது இந்தியாவில் சாதாரன ஒரு படை வீரன் முதல் அத்துனை வீரர்களும் ஆறு அடி க்கு மேல் உயரமாக இருந்தனர் என்றும் 6 pack 8 pack என கடும் உடல் வலிமையோடு இருந்ததை பார்த்து பிறகு அலெக்சான்டரே பின்வாங்கினார் என்பதும் நம் முன்னோரின் சிறப்பை அறிய முடிகிறது ஆதலால் நம் முன்னோர்கள் கூறுவது அனைத்தும் சரியே

நம் குழந்நதைகளை நம் வீட்டிலிருக்கும் முதியோர்களிடம் வளர்த்தல் வேண்டும் அவர்கள் கதைகள் சொல்லி குழந்தைகளை வளர்ப்பதால் அதுவே அக்குழந்தைக்கு நற்பண்புகள் வளரவும்,கற்ப்பனைத்திறன் வளரவும்,பிறரிடத்தில் எப்படி நல் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் சொல்லித்தரும்

எழுதியவர் : க.விக்னேஷ் (4-Aug-17, 12:06 pm)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 4282

சிறந்த கட்டுரைகள்

மேலே