பாவக்

பாவக்கு, பாவக்கு....
◆◆◆◆◆◆◆◆
யாரப்பாட்டி வக்கு, வக்கு, பாவக்குன்னு கூப்பிட்டீங்க?
◆◆◆◆◆
எம் பேரன் பொன்மொழி மகனோட பேருதாண்டி மங்கை பாவக்கு. அந்தக் கொழந்தை போன பொறப்புல என்ன பாவம் செஞ்சுச்சு. எம் பேரன் அதுக்கு பாவக்குன்னு பேரு வச்சிருக்கான். படிச்சவன். பீக்காரு கலக்கட்டரா இருக்கறான். என்னதான் இந்திப் பேருமேல ஆசை இருந்தாலும் 'பாவக்கு' -ன்னா பேரு வைக்கறது? பாவம் - மாம். அப்பறம் வக்காம். இந்த அநியாத்தை எங்க போயிச் சொல்லறது?
●◆◆◆◆
பாட்டிம்மா உங்க பேரன் அய்.ஏ.எஸ் படிச்சவரு. அவருக்குப் பிடிச்ச பேரத் தன்னோட கொழந்தைக்கு வச்சிருக்காரு. உங்களால எப்படி உச்சரிக்க முடியுதோ அப்பிடி உச்சரிச்சுட்டுப் போங்க.
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
Paavak = pure
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆●●◆◆◆◆●●●
பெயர்ப் பலகை ஒன்றில் பூவிஷா என்று எழுதப்பட்ட பெயரைப் பார்க்க நேர்ந்தது. இந்திப் பெயர் வைக்கவேண்டும் என்ற ஆர்வக்கோளாறில் வைக்கப்பட்ட பெயராக இருக்கும். இந்தப் பெயரை ஆய்வுக்கு உட்படுத்த விரும்புபவர்கள் கூகுலில் தேடிப்பார்க்கவும். இல்லையெனில் indiachildnamescom-ல் தேடிப்பார்க்கவும்.
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழியுணர்வை வளர்க்க.
●●●●●●●●●●●●●●●●●●●◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

எழுதியவர் : மலர் (4-Aug-17, 9:22 pm)
பார்வை : 167

மேலே