காதல் நதி

கனவுடன் நான் வாழும் போது
என் கற்பனைகள் காவிரி நதி
அந்தக் கற்பனைகளில்
உன் நினைவுடன் நான் வாழும் போது
என் நெஞ்சம் காதல் நதி
அந்தக் காதல் நதித் தீரத்தில்
நிஜமாக நீ நடந்து வரும் போது
நாமிருவரும் சங்கமித்து ஓடும் வற்றாத ஜீவநதி !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (5-Aug-17, 7:55 am)
Tanglish : kaadhal nathi
பார்வை : 221

மேலே