காதலியின் திருமணம்

இதுவரை என்னை அழைக்காதவள்
அழைக்கின்றாள்
தேடிவந்து!
அதை அறிந்து நான்
தென்றலாக தேடிச்சென்றேன்!!
என் காதலியின்
திருமணத்திற்க்கு!!!,

செல்லும்வரை
தெரியவில்லை
செல்வது ஏன் என்று!
ஆனால்
சென்றபின் தெரிந்துகொண்டேன்!!
இனி அவள் மன(ண)ம்
என்னிடம் தி(வி)ரும்பாது என்று!!!,

வரவேற்க்கும் இடத்தில்
விருந்தினர்களால் தெளிக்கும்
பன்னீர்!
அதனை விழிதிறந்து
பார்க்க முடியாத அளவில்
என் கண்களில் கண்ணீர்!!,

பாதங்கள் நடப்பதற்கககு
போடப்பட்ட ஒரு நடைமேடை
அதிலும்
நடித்திக்கொண்டு போகும்
நான் ஒருமேதை,

மணவரை செல்லும்
வழியெல்லாம்
அலங்கறிக்கப்பட்ட தோரணம்!
அதில்
அழுதுக்கொண்டு போகும்
தோற்றுப்போன ஒருமனம்!!,

எதிரும் புதிரும்
அமைந்த மணபந்தலில்
மணமகனும்
மணமகளும்
மாலைமாற்றம்!
அதில் ஏனோ
என்னவளுக்கு ஒரு
தடுமாற்றம்!!,

என்னாளும் என்னை
விரும்பாதவள் பார்க்கின்றாள்
விரும்பி!
அப்போதும் நான் அவளை
பார்க்கவில்லை திரும்பி!!,

மணமகள் விரல் பிடித்து
மணமகன் மோதிரம் மாற்றும்
ஒரு மாற்றம்!
அது விடுகதையாக
என்னிடம் விதி மாற்றிய
ஏமாற்றம்!!,

எரியும் தீயாக
இங்கு என்மனம் எரிய
அங்கு நடக்கின்றது!
அக்னி என்னும்
தீயின் முன் ஒரு திருமணம்!!,

மங்கல இசையுடன்
என்ஜீவன் பாடும் ஒரு
ஒரு தலை ராகம்!
ஆனால்
அதனை கேட்க
இல்லை இங்கு யாரும்!!,

நெஞ்சங்கள் ஒன்று சேரும்
ஒரு நிச்சயதார்த்தம்
நிச்சயமாக இது என்வாழ்வில்
ஒரு எதார்த்தம்,

புன்னகைக்கு சொந்தக்காரியான
பூ மகள் மனம்
இன்று
புன்பட்டு தவிக்கின்றது!
இதனை
உணராமல்
சில உறவுகள்
அதனை கண்டு சிரிக்கின்றது!!,

இன்று மட்டும் பூசிய
மை விழியோரம்
நீர் வழிகின்றது!
விதி சேர்க்க நினைத்தது
யாருடன் யார் என்று?!!,

மணமேடையில்
மணமகனும் மணமகளும்
அமர்ந்தார்கள் இடம் மாறி!
அப்போதும்
உள்ளே அழுகின்றது
என் இதயம் தடுமாறி!!,

சமையல் அறையெங்கும்
உணவு
அதில்
நானும் அவளும்
ஒன்றாக உண்ண வேண்டும் என்பது
பல நாள் கனவு,

தலை வாழை இலையில்
ஒரு ஓரம் இனிக்கும்
இனிப்பு
அதில்
விரல் பட்டால்
விதி என்னைக் கண்டு சிரிக்கும்,

இத்தனை நாட்கள்
எதிர்காலம் இறந்நது போனது!
இன்று ஏனோ
நிகழ் காலம் முடியாமல்
இன்னும் நீளுது!!,

உயிர் உடன்
உயிர் சேர்ந்து மாறியது
ஒரு உறவாக!
அப்போதே ஒதுங்கி நின்றது
ஒரு இதயம் தனியாக!!,

நீ
அழைக்காத போது
ஆயிரம் முறை வந்தேன்
அன்பே
உன்னை காண!
அன்றுகூட
ஒருநாள் வரை
கண்டதில்லை என்
உடல் வாட!!
ஆனால்
இன்று
நீயாக அழத்து
என் உள்ளம்
தீயாக எரிந்து விட்டதடி
உயிரே
உன் திருமணத்தில்...
..............................................................

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (5-Aug-17, 7:01 pm)
பார்வை : 2019

மேலே