நட்பே நிரந்தரம்

உணர்வில் கலந்த உள்ளங்களின் மிதப்பு நட்பு
இது கனிவின் சேர்ப்பு சுவைக் கனியின் வார்ப்பு
மகிழ்வின் உவப்பு மன நிறைவின் பொலிப்பு
இன்பம் துன்பம் இங்கே இரண்டறக் கலப்பு
நலவும் கெடும்பும் தோழர் நலனும் நயமும்
இங்கு ஓரினச் கோர்ப்பு இது உறவுகளின் குவிப்பு
பிரதிபலன் பாரா மனங்களின் பிடிமானச் சேர்ப்பு
காரணம் அறியாது கலந்த ஓர் பரஸ்பர ஈர்ப்பு
உயர்வும் தாழ்வும் இங்கு ஒன்றாய்க் கலக்கும்
கோபம் தாபம் எதிலும் இது விலகாமல் நிற்கும்
காலம் பல சென்றாலும் காலாவதியாகாமல்
இதயங்கள் இணைந்தே கிடப்பது அதுதான் நட்பு


ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (6-Aug-17, 1:13 pm)
Tanglish : natpe nirantharam
பார்வை : 501

மேலே