கண்ட நாள் முதலாய்-பகுதி-16

.......கண்ட நாள் முதலாய்.......

பகுதி : 16

"அது...நான்....நீங்க...உங்களை...என்று ஏதேதோ உளறிக் கொண்டிருந்தாள் துளசி...அவளது உதடுகள் நடுக்கத்தில் தடுமாறிக் கொண்டிருந்தன...அப்போது அதிலிருந்து அவளைக் காப்பற்றவென்றே தொலைபேசியின் மணி அடித்தது...அதில் பவியின் பெயரைக் கண்டதும்தான் அவளுக்கு போன உயிர் திரும்பி வந்ததென்றே சொல்லலாம்...அரவிந்தனிடம் பேசிவிட்டு வருவதாகக் கூறியவள்,அவன் சரியென்று சொன்னதுதான் தாமதம் அந்த இடத்திலிருந்து தப்பினோம் பிழைத்தோம் என்று ஓடிவந்து...போனை அழுத்திக் காதில் வைத்தாள்...

அரவிந்தனுக்கு அவள் எதுவுமே சொல்லாமல் சென்றது மிகவும் ஏமாற்றமாகவும் மனதிற்கு கவலையாகவும் இருந்தது..."அவளது தடுமாற்றத்தையும் மௌனத்தையும் சம்மதம் என்று எடுத்துக் கொள்வதா இல்லை அவளுக்கு என்னைப் பிடிக்கவில்லையென்று எடுக்கட்டுமா...?அவனுக்கு அனைத்தையும் நினைக்க நினைக்க தலையே வெடித்துவிடும் போல் இருந்தது...அப்படியே தலையைப் பிடித்தவாறு நிலைப்படியோடு சாய்ந்து அமர்ந்து கொண்டான்...

"ஹலோ மேடம் எங்களை எல்லாம் உங்களுக்கு ஞாபகம் இருக்கா...இல்லை போய் தொலைஞ்சது தொல்லைனு சந்தோசமா இருக்கியா..."

"போடி...நீ வேற...என்னோட நிலைமை புரியாம..."

"ஆ...உ..னா இதை ஒன்னச் சொல்லிடு...அப்படி என்ன நிலைமைல நீங்க இப்போ இருக்குறீங்களாம்..."

"நீ மட்டும் இப்போ கோல் பண்ணலைனு வை...நான் அப்படியே குளத்தில குதிச்சிருக்க வேண்டியதுதான்...அரவிந்தன்கிட்ட இன்னைக்கு நேராவே சிக்கிட்டன்..."

"ஹா....ஹா....ஏன்டி என்னமோ சிங்கத்துக்கிட்ட சிக்கின மாதிரி சொல்லிக்கிட்டு இருக்காய்...அப்போ நான் தான் கரடி மாதிரி வந்து உங்க ரொமான்ஸைக் குலைச்சிட்டனா...??"

"நீ மட்டும் இப்போ நேரில இருந்த எனக்கு வாற கோபத்துக்கு உன்னைக் கடிச்சே குதறியிருப்பேன்...என் நிலைமையைப் பார்த்தா உனக்கு சிரிப்பா இருக்கா...போனை வைடி..."

"கூல் பேபி....கூல்....இப்போ எதுக்கு இவ்வளவு கோபம் உனக்கு...?"

"எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு பவி...அரவிந்தன் இந்த கல்யாணத்தை ரொம்ப ஆசையோடும் ஆவலோடும் எதிர்பார்த்துக் காத்திட்டு இருக்காரு...என்னோட குடும்ப சந்தோசத்துக்காக அவரோட வாழ்க்கையை பத்தி யோசிக்காம முடிவு எடுத்திட்டன்னோனு கவலையா இருக்கு...எனக்கு என்ன பண்றன்னு ஒன்னுமே புரியுதில்லை பவி...அவரோட கேள்விகளிலில இருந்து என்னால எப்பவுமே ஓடிட்டு இருக்க முடியுமா??இப்போவே என்னால சமாளிக்க முடியல...இதுல கல்யாணத்துக்கப்புறம்...அதை பத்தி நினைச்சாலே என்னவோ செய்யுது....

"எதையும் யோசிச்சு மனசை குழப்பிக்காதடி...நடக்கிற எல்லாமே நல்லதுக்குத்தான்னு நம்பு....எல்லாமே நல்லதாவே நடக்கும்...அரவிந்தனை நீ இன்னொரு ஆளா பார்க்கும் வரை உனக்கு அவர்கிட்ட பேசத் தயக்கமாத்தான் இருக்கும்...உன்னுடையவர்னு நினைச்சுப்பாரு எல்லாம் சரியாயிடும்.."

"ம்ம்....அதுக்குத்தான் நானும் முயற்சி பண்றன்...நீ சொன்ன மாதிரி எல்லாமே நல்லதாவே நடக்கனும்...சரி அதை விடு,உன் பயணமெல்லாம் எப்படி இருந்திச்சு...நீ தங்கவேண்டிய இடமெல்லாம் செட் ஆகிட்டுதா???..."

"எல்லாமே டன்...நாளைக்கு வேலையில போய் சேர்ரது ஒன்னு தான் பாக்கி....சரிடி நான் உனக்கு அப்புறமா கோல் பண்றன்....எல்லாரையும் கேட்டதா சொல்லு...இனி ஒரு வாரத்துக்கு கொஞ்சம் பிசி....உன் கல்யாணமெல்லாம் முடியத்தான் கோல் பண்ணுவேன்னு நினைக்கிறன்...மீண்டும் உங்களைத் தொடர்பு கொள்ளும் வரை உங்களிடமிருந்து விடைபெறுவது என்றும் உங்கள் அன்பின் பவி...பாய்...பாய்...டேக் கெயார்..."

"அம்மா தாயே....உன் அலம்பல் தாங்க முடியல....உன் உடம்பையும் கொஞ்சம் கவனிச்சுக்கோ...அதை இதைன்னு தின்னு உடம்பை பழுதாக்கிடாத...ப்ரியானதும் கூப்பிடு....பாய்டி.."

"சரிங்க பாட்டிமா...பாய்...."

பவியோடு கதைத்து முடித்ததும்தான் அவள் மனதுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது...அதையே நினைத்து புன்னகைத்தவாறு குளத்தடிக்குச் சென்றவள்,அரவிந்தன் இருந்த நிலை கண்டு தயங்கி நின்றாள்...அவன் தலையைப் பிடித்தவாறு சாய்ந்தமர்ந்திருந்த விதத்தை காண துளசிக்கு மிகவும் வேதனையாக இருந்தது...அவனின் அருகில் சென்று சிறிது நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் அவனிடம் அசைவை உணர்ந்து வேறு புறம் திரும்பிக் கொண்டாள்...

தன் அருகே ஏதோ நிழலாடுவதை உணர்ந்தே கண்விழித்த அரவிந்தன்,அருகில் துளசி நிற்பதைக் கண்டதும் எழுந்தவன் அவள் ஏதும் சொல்வாளா என்ற ஆவலில் அவளது பதிலிற்காய் காத்து நின்றான்...அவன் எழுந்ததை உணர்ந்து அவன் புறமாய் திரும்பிய துளசி அவன் பார்வையில் கட்டுண்டவளாய் அவனது விழிகளையே நோக்கிக் கொண்டிருந்தாள்...இருவரது பார்வைகள் மட்டுமே மௌனமாய் பேசிக் கொள்ள வார்த்தைகள் அங்கே தள்ளி நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கின....இருவரும் எவ்வளவு நேரமாய் அப்படியே நின்றார்கள் என்பது அவர்கள் இருவருக்குமே தெரியவில்லை...இரு குடும்பத்தாரும் அருகில் வந்ததும்தான் அவர்கள் கண்களை ஒருவரிடமிருந்து ஒருவர் விடுவித்துக் கொண்டார்கள்...

"என்னபா அரவிந் கிளம்பலாமா??.."

"ஆஆஆ...என்ன அப்பா கேட்டீங்க??.."

"அண்ணா...நீ இந்த உலகத்தில தானே இருக்காய்...இல்லை அண்ணியோட எங்கையும் டூயட் பாடக் கிளம்பிட்டியா.."

அனைவரும் அருகில் வந்ததை உணர்ந்தவனால் அவளது விழி அம்பிலிருந்து விடுபட முடியவில்லை...சிறிது நேரம் ஒன்றும் புரியாமல் இருந்தவன்...அனைவரும் அவனைக் கேலி செய்யத் தொடங்கியதும்தான் சுயநினைவுக்கே வந்தடைந்தான்...

"ஏய் வாயாடி...கொஞ்ச நேரம் உன் வாயை மூடிட்டு இருக்கியா...நாங்க கிளம்பலாம் பா..."

"ம்ம் சரி பா...நீ இன்னும் ஏதும் பேச வேண்டி இருந்தாலும் பேசிட்டு வா...நாங்க வெளியில வெயிட் பண்றோம்.."

"இல்லை பா...எல்லாமே பேசியாச்சு...இதைச் சொல்லும் போது துளசியை ஓரக்கண்ணால் பார்த்தவாறே கூறினான்...அவளும் அந்த நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்...அவளின் பார்வையிலிருந்த எதுவோ ஒன்று அரவிந்தனின் மனதில் ஏற்பட்ட குழப்பங்களை விரட்டியடித்திருந்தது...அவள் அவனுக்கானவள் என்ற எண்ணம் மட்டுமே அவனுள் சுழன்று கொண்டிருந்தது...அவளது உதடுகள் சொல்லாத பாசைகளை அவள் பார்வைகள் சொல்லியதில்,அதுவே அரவிந்தனுக்கு போதுமானதாக இருந்தது...அந்த மகிழ்ச்சியிலேயே அவன் கிளம்பலாம் என்று சொன்னான்...

துளசியும் அதற்குச் சம்மதமாய் அவள் பெற்றோரிடம் தலை அசைத்ததும் இரு குடும்பத்தினரும் ஒருவரிடமிருந்து ஒருவர் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினர்...கடவுள் அவர்களுக்காக வடிவமைத்திருக்கும் கதையினை அறியாத அந்த இரு உள்ளங்களும் வெவ்வேறு உலகில் சஞ்சரித்தவாறே அவர்களது வீட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தனர்....



தொடரும்.......

எழுதியவர் : அன்புடன் சகி (7-Aug-17, 6:27 am)
பார்வை : 615

மேலே