சர்வாதிகாரமே சர்வலோகம்

சமீபகாலமாய் சங்கேதகுறியீடு சமூகத்தில் சட்டமாக்கப்பட
சககிரஹங்களுக்கும் சவாலாகிப்போனதாய்
சபையில்கூறிய சன்மார்க்கநெறி சரிதானா...?

சனீஸ்வரனின் சம்பளமே சர்குணனுக்கு சந்தேகத்திற்குள்ளானதால்
சர்ச்சைகள் சங்கமித்து சமீபகாலமாய் சக்தியுடன் சங்கரனும் சண்டையிட...

சந்திரனின் சலுகைகளுடன் சம சதவீதம் சரியல்லவென
சண்முகனும் சளைக்காது சந்தர்பத்தில் சன்னமாகசொல்ல...

சரசரவென சருகுகளிடையே சபிக்கப்பட்ட சர்பம் சலனம்நிறைந்த சங்கொலிகேட்க
சத்தியம்தொலைத்து சபதம்கலைத்து சட்டென சடுதியில் சவமாகிப்போனதே...!

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (7-Aug-17, 8:02 pm)
பார்வை : 70

மேலே