நல்லபாம்புகள்

இரவு 3மணி வீட்டுல எல்லாரும் தூங்கிட்டாவனு தெரிஞ்சதும் சாந்தரம் எடுத்து வச்ச பையை எடுத்துக்கிட்டு வெளிய வந்து வேகமா நடந்துகிட்டே கருப்பசாமிக்கு போன் பண்ணி நான் வந்திட்டேன் நீ எங்க இருக்கனு கேட்டாள் செல்வி.. நீ அங்கனயே நில்லு நானும் வந்துட்டேன்னு சொல்லிக் கொண்டு வேகமாக நடந்தான்...இருட்டில் மறஞ்சு நின்ன செல்விய பாத்ததும் பக்கத்துல போயி பையை வாங்கிட்டு பஸ் நிறுத்தத்தை நோக்கி நடந்தனர். காலைல 7மணிக்கு ரயிலு ஏறி சென்னைக்கு போயிட்டா எந்தப் பிரச்சனையும் இல்ல ஆனா நாம ரயில் ஏறும் வரை யாரும் பாக்காம இருந்தா போதும்னு கருப்பு செல்வியிடம் சொல்லிக்கொண்டே நடந்தான் செல்வியும் கேட்டுக்கிட்டே பின் தொடர்ந்தாள். காலை 4.30 க்கு மார்க்கெட் போகும் பஸ் வரும் முன்னாடில்லாம் நிலத்துல வெளஞ்ச காய்கறிய கொண்டுக்கிட்டு நெறைய விவசாயி அந்த பஸ்ல போவாங்க இப்போ தண்ணி இல்லாம வானம் பாத்த பூமியா போச்சு அதனால பஸ் ஒன்னு ரெண்டு பேரோடத்தான் மார்க்கெட் போகுது. அதான் அந்த பஸ்க்கு காத்திருந்தனர் பஸ்டாண்டு பின்னாடி இருட்டுல. ஆள் அரவமில்லாத ரோட்டில் தூரத்துல பஸ் வருவதை பார்தான் கருப்பு செல்விய கூட்டிட்டு முன்னாலே வந்து பஸ் வந்ததும் ஏறி சீட்டுல பேக்க வச்சிட்டு அமர்ந்தனர். ஏழு கண்கள் இவர்களை பார்த்தது செல்வி முகத்த மூடியிருந்தா கண்டக்டரிடம் ஜங்சனுக்கு டிக்கட் எடுத்திட்டு அமர்ந்தான். கிராமத்தின் பலமும் பலவினமும் நமக்கு தெரியதவங்களுக்கு கூட நம்மள தெரியும். ஏழு கண்ணுல ஒரு கண்ணு செல் போன எடுத்து செல்வி அப்பாவுக்கு போன் பண்ணியது. ஏப்பா உன் மவ கார்ப்ரேசன்ல வேலபாக்குற சின்ராசு மவனோட போயிக்கிட்டு இருக்காப்பானு கிசுகிசுத்தான். பதறி எழுந்த செல்வி அப்பா பசுபதி வீடு முழுவதும் தேடினான். அவ இல்லைனு தெரிஞ்சதும் தன் தம்பிகளிடம் விசயத்த சொல்லிட்டு ஒத்த கண்ணணுக்கு போன் அடிச்சு பஸ் எங்க போவுதுனு கேட்டான் பஸ் ரஸ்தா நோக்கி போவுதுனு சொன்னான். அவங்க ரெண்டு பேரையும் பாத்துக்க நாங்க கெளம்பி வரோம்னு பைக்க உதச்சான் பசுபதியின் தம்பிகளும். வேகமாக விரைந்தனர். பஸ் ஜங்சனுக்கு போவதுக்குள்ள நாம போகனும் பஸ் டவுண் சுத்தி வரதுக்குள்ள தச்சநல்லூர் வழியா நாம போயிடலாம்னு பேசிகிட்டே வேகமாக விரைந்தனர். பசுபதியும் அவன் தம்பிகளும் ஜங்சன் வரவும் பஸ் ஜங்சனுக்கு வரவும் சரியா இருந்துச்சு. இறங்குறதுக்குள்ள பிடிக்க பட்டனர். பசுபதியின் நண்பன் காரில் ஏற்றப்பட்டனர். கருப்பு காரில் ஏறியவுடன் அருவா கழுத்துல வச்சு கத்துனா தலை துண்டாக்கப்படும்னு பசுபதி தம்பி சொன்னான். காலை 5.30 க்கு கார் தாமிரபரணி ஆத்தோரம் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நின்றது கதவு திறக்கப்பட்டது கருப்பு வெளியே இறங்குனதும் பசுபதி சிகரட் பத்த வச்சிட்டே தன் தம்பியிடம் தலையசைத்தான்...

தாமிரபரணியில் கொல்லப்படாதவர்களால் தமிரபரணியில் கொல்லபடாத ஒரு தனி குழுவில் ஒருவன்
கருப்பு தலை செல்வி முன்னிலையிலேயே துண்டிக்கப்பட்டது எந்த விசாரணையும் இல்லாமல்.

ஆஆஆஆவன கத்தியபடி மயங்கினாள். கருப்பு சாக்குப்பையில் கல்லுடன் கட்டி ஆத்துல வீசப்பட்டான். எல்லாரும் தலை முழுகிட்டு கார் பசுபதி வீட்டநோக்கி பறந்தது. பாதி வழியில செல்வி முழிச்சு கத்த உடனே பசுபதி அவன் கூட ஓடுனதுக்கு உன்னையும் சங்கருத்துருப்போம் நான் பெத்த புள்ளனு விட்டேன் சத்தம் போடாதடினு சொன்னான். பயந்து சத்தமில்லாமல் அழுதா கண்ணிர் மட்டும் வந்துச்சு.. கார் வீட்டுக்கு பக்கத்துல நின்னது கதவ தொறந்து எல்லாரும் இறங்க கடைசி செல்வியை இறங்குனு கையசைக்க செல்வி கண்ண தொடச்சிட்டே இறங்குனா கண்ணிமைக்கும் நேரத்தில் கார ரொம்ப நேரமா பின் தொடர்ந்த பைக்ல இருந்த ரெண்டு பேர்ல ஒருத்தன் செல்வி வயித்துல கத்திய இறக்கிட்டு பைக் மின்னல் வேகத்துல பறந்தது.. பசுபதி சுதாரிப்பதுக்குள்ள இரத்த வெள்ளத்தில் சரிந்தாள்..அய்யோ அம்மானு அலறுகிட்டு இருக்க.. செல்வி போன் ஒலித்தது பசுபதி தம்பி போன எடுக்க மறுமுனையில் ஹலோ செல்வி இரயில் ஏறிட்டயா கருப்பு உன்னை பத்திரமா கூப்டு வந்திருவான் நாளைக்கு காலையில நமக்கு கல்யாணம் எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன் ஹலோ ஹலோ பேசு செல்வி.. போன் துண்டிக்கப்பட்டது.
பைக்ல போனவங்க ரொம்ப தூரம் போயி ஓரமா வண்டிய நிப்பாட்டி போன் பண்ணி கொம்பையா அண்ணே மீதி பணத்த எப்ப தருவீங்க உங்க பையன் லவ் பண்ண பொண்ண போட்டாச்சு... வீட்டுக்கு வாங்கடா தரேன்னு சொன்னது
தன் குட்டிகளையே சாப்பிடும் நல்ல பாம்புகளில் ஒன்று...

எழுதியவர் : அதிவீரதமிழன் (8-Aug-17, 12:30 am)
சேர்த்தது : அதிவீரதமிழன்
பார்வை : 386

மேலே