விடிஞ்சா கல்யாணம் ஆனால்

எல்லா பெற்றோருக்கும் தங்கள் பெண்ணை ஒரு நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற கனவு நியாயமான ஒன்று தான்..!!

ப்ரியாவின் பெற்றோரும் அப்படி தான் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர்..!!

படித்த மாப்பிள்ளை.... கை நிறைய சம்பாதிக்கும் ஒரு வரன் அமைய இரு வீட்டாருக்கும் பிடித்து விட்டது..!!

உடனே பேசிமுடித்து நிச்சயம் செய்து விட்டனர்..!!

ப்ரியாவும் நிச்சயம் செய்த மணமகனுடன் தினமும் அலைபேசியில் பேசத் தொடங்கினாள்.!!

திருமண நாள் நெருங்க நெருங்க அவள் மனதில் ஒரே பதட்டம்..!!

வீட்டில் உறவினர்கள் அவரவர் பொறுப்பேற்ற வேலைகளை செய்து கொண்டிருந்தார்கள்.!

ப்ரியாவின் மனது மட்டும் நாட்கள் நெருங்க நெருங்க ஒருவித தவிப்பு தொற்றி கொண்டது.

இருவரது வீட்டிலும் திருமண வேலைகள் தொடர திருமணநாளை ஆவலோடு காத்திருக்க...

இதோ.. வந்து விட்டது ..

நாளை திருமண நாள்...

ஆனால் ப்ரியாவின் மனது பல கேள்விகளை கேட்டு பதில் தெரியாமல் தவித்தது..!

அன்றுகாலை யாருக்கும் தெரியாமல் ப்ரியா எழுந்து வீட்டின் வெளியே வந்தாள்.

வீட்டை ஒரு முறை சுற்றி பார்க்க வேண்டும் போல் இருந்தது.

தினமும் அவருடன் அலைபேசியில் பேசியதில் இந்த வீட்டை விட்டு செல்ல போகிறோம் என்று அவள் அப்போது நினைக்கவில்லை..!!
ஆனால் ஏதோ ஒன்றை இழக்கப்போகிறோம் என்று மட்டும் அவள் மனம் பரிதவித்தது..!!

தந்தையையும், தாயையும் பார்த்தாள். எல்லோரும் அவரவர் வேலையாய் இருந்தனர்..!!

அந்தநேரம் அவள் வீட்டை ஒரு முறை சுற்றி வந்தாள்.

ஓரிடத்தில் நின்று விரித்த கண்களோடு வீட்டை பார்த்தாள். கண்கள் சுருங்கி பின்னர் ஓரத்தில் நீர் துளி திரண்டது..!!

அந்தநேரம்.. தங்கை தனது புதுத்துணி பரவசத்தில்
"அக்கா உனை எங்கெல்லாம் தேடுறது.? மருதாணி போட்டுதாக்கா"... என ஓடி பக்கத்தில் வந்தாள்.

ப்ரியாவின் முகத்தை பார்த்ததும்..
" என்னாச்சுக்கா..?"
என்றாள்..!!

"பூ வாங்கினால் கூட சரிசமமாக வெட்ட சொல்லி சண்டை போடும் நான் இனி யாருடன் சண்டை போடுவேன்..??

இந்த சின்ன சின்ன மகிழ்ச்சிகளை கொடுத்து விட்டு நான் செல்ல போகிறேனே" என மனதோடு கேட்டாள் விழியோரம் வடிந்த நீரை துடைத்துக் கொண்டே...

"ஒண்ணுமில்லடி.. அப்புறமா வந்து போட்டுதாரேன்." சொல்லி அவளை அனுப்பினாலும் நாளைமுதல் இந்த உரிமை தொடருமா என எண்ணினாள்..!!

"அடுப்படியில் பால் கொதிக்கிறது நீ எங்கேடி போன..??" என்று என்னை திட்டுவாளே அம்மா.. நானும் அம்மாவை அடிக்கடி திட்டுவதும்.. பின்னர் கட்டி அணைப்பதும் இனி கிடைக்குமா..??

அப்பா யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்..!! உள்ளே சென்று
அவர் பக்கத்தில் அமர்ந்தேன்..!!
அப்பா பேசிக்கொண்டே என்னை பார்த்து "அம்மாவை கொஞ்சம் கூப்பிடும்மா..!!" என்றார்..!!

"நீ எது கேட்டாலும் வாங்கி தருகிறேன். நீ என் செல்லம்டா.." என்று அன்பை கொட்டும் அப்பாவின் அன்பை இனி நான் எங்கே தேடுவேன்..?"

எச்சிலையும், சோகத்தையும் தொண்டையில் விழுங்கி விட்டு அம்மாவை அழைத்து விட்டு வெளியில் உள்ள மாடிப்படியில் போய் உட்கார்ந்தாள்..!!

எங்கிருந்தோ குரல் கேட்டது...

"அடியே உள்ள போ.. காத்து கறுப்பு பட்டுற போவுது.. நாளைக்கு கல்யாணத்த வச்சிக்கிட்டு வெளியே உட்காராத.. !!"
பாட்டியின் குரல் தான் அது..!

எப்போதும் எதையாவது பழஞ்சொல்சொல்லி ஏசிக் கொண்டிருக்கும் பாட்டியின் பேச்சை கேட்க நான் பாட்டியை முறைப்பேன்..!!
ஆனால் இப்போது முறைக்க தோணவில்லை. முகம் அப்படியே அழுவது போல பொங்கியது.

" என்னாச்சுடி என் ராசாத்திக்கு..?"

பாட்டி அருகில் வந்து கேட்டவுன் அதற்கு மேல் முடியவில்லை. பாட்டியின் மடியில் முகம் புதைத்து கத்தி அழுதேன்.. !!

எல்லோரும் பயந்து கொண்டு ஓடி வர அம்மாவிடம்..

"அம்மா நான் இங்கேயே இருந்து விடுகிறேன். உங்களை விட்டு நான் எப்படி செல்வேன். அங்கே எப்படி இருக்குமோ எனக்கு பயமாக இருக்கிறது..!!" என்று கண்ணீர் விட்டேன்..!!

உடனே அப்பாவின் மனம் அழுவதை நான் உணர்கிறேன். அப்பா என்னை அணைத்து சமாதானம் செய்கிறார்..!!

"என்னம்மா ப்ரியா.. நல்ல இடம்பார்த்துதான் பேசிமுடிச்சிருக்கேன். நீ அங்க இதவிட சந்தோசமா இருக்க போற.. சாயந்தரம் ஆயிருச்சுனா கல்யாணவீடு..
அழகூடாது.." என் கண்களை துடைத்து விட்டார்.

அப்பா அவ்வளவு நெருக்கம் இல்லாமல் இருந்தாலும் அப்பாவிற்கும் மகளுக்கும் உள்ள பாசம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது..!

தங்கை குலுங்கி குலுங்கி அழுதாள்.
"அழாதேக்கா.. மாமா உன்ன நல்லா பாத்துப்பாருக்கா.." என வெகுளி பேச்சில் சமாதானம் செய்தாள்..!!

ஒருவாறு மனதை தேற்றி கொண்டு இயந்திரம்போல் நடந்தேன்..!

அன்று இரவு...

எனக்கு பிடித்த அத்தனையும் சமைத்து கொடுத்தாள் அம்மா..!! ஆனால் என் மனம் புண்பட்டு போய் இருந்ததால் எதுவும் சாப்பிட பிடிக்கவில்லை..!

நாளை எனக்கு திருமணம்.. போகும் இடம் சொர்க்கமோ இல்லை நரகமோ என்றெல்லாம் தெரியாது. ஆனால் நிம்மதியாய் வாழ்ந்த ஒரு சொர்க்கத்தை விட்டு மட்டும் நான் செல்ல போகிறேன் என்பது மட்டும் தெரிந்தது..!!

அடிவயிற்றில் நெருப்பை கட்டி வளர்த்த அம்மா..

நான் கேட்டதையெல்லாம் வாங்கி தந்த அப்பா..

என்னிடமிருப்பதெல்லாம் அவளுக்கும் வேண்டுமென்று உரிமையோடு சண்டைபோடும் தங்கை ..

எப்போதும் என்னை தவறு செய்யவிடாமல் சத்தம் போட்டுகொண்டிருக்கும் பாட்டி..

எல்லா உறவுகளையும் உதறிவிட்டு...
எங்கோ...
புது உறவுகளுடன் நாளைமுதல்... ...

********
ஆணின் திருமணம் என்பது ஆண்கள் வாழ்வில் நடக்கும் ஒரு நிகழ்ச்சி..!!
ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வாழ்வில் அது முற்றும் மாறுபட்ட உலகில் காலடி வைக்கும் மாற்றம்..!!

அவள் வாழ்ந்த வீட்டில் இருந்து வேரோடு பிடுங்கி எடுத்து மற்றொரு வீட்டில் நட்டு வைப்பதுதான் பெண்ணின் திருமணம்..!!

*நேசியுங்கள் மனைவியை..*
*மற்றும் அவர்களின் உணர்வுகளை!!.*

நட்புடன் குமரி

எழுதியவர் : முகநூல் (8-Aug-17, 3:03 am)
சேர்த்தது : குமரிப்பையன்
பார்வை : 4568

மேலே