நிதர்சன ஏக்கம்

தொடக்கத்திலேயே தடுமாற்றம்.....
இக்கவிதையைத் தொடங்கும்போது.....

அவளது பிரத்தியேகப் பார்வையும்
பளிச்சென்ற புன்னகையும் தந்த
அதே தடுமாற்றம்......

அப்போது நேரில் வர்ணிக்கக் குரல் எழாமலும்
இப்போது வரியில் வர்ணிக்க வார்த்தைப் போதாமலும் செய்யும்....
அதே தடுமாற்றம்.....

ஆனால்....
இத்துணைத் தடுமாற்றத்திலும்
ஒன்றில் மனம் தெளிவுகொண்டுள்ளது.....

என் வெற்றியில் கைத்தட்டியாகவும்....
என் கண்ணீரில் கைக்குட்டையாகவும்....

என் வேள்விகளில் ஊக்கமாகவும்....
எனக்கு நிம்மதிதரும் தூக்கமாகவும்....

என் சரிகளைப் போதிப்பவளாகவும்....
என் தவறுகளில் நீதித்தாயாகவும்....

என் மனச்சுமையில் வலிநீக்கியாகவும்.....
என் பயணங்களில் வழிகாட்டியாகவும்....

நிச்சயம் நீ நிலைத்திருப்பாய் என்ற
நிதர்சன ஏக்கத்தை நம்பியே
என் வாழ்வின்.....
ஒவ்வொரு அடியும்....
ஒவ்வொரு நொடியும்.....💙💙

எழுதியவர் : மகேஷ் லக்கிரு (8-Aug-17, 8:18 am)
சேர்த்தது : மகேஷ் முருகையன்
Tanglish : nitharsana aekkam
பார்வை : 302

மேலே