உணர்வின் மொழி

தூர தேசத்தில் நீ இருந்தாலும்
தூங்கும் பொழுதும் உன் ஞாபகமே அண்ணா ...

பட்ட மரத்தில் பால் சொரியும் ...
பாலைவனத்திலும் பூ பூக்கும் ...
துடிக்காத இதயமும் துடித்துவிடும்
நீ என் அருகில் இருந்தால் அண்ணா ...

எப்பொழுது வருவாய் என
காத்திருக்கும் தேடல் தனை
காற்றினில் அனுப்பிவைக்கிறேன் ...
உந்தன் காதினில் சொன்னதா
எந்தன் பாசம் தனை

உம்மாவின் மடியில் உறங்க வேண்டும் ...
வாப்பாவோடு மசூதிக்கு செல்ல வேண்டும் ...
உடனே கிளம்பி வந்துவிடேன் அண்ணா ...

நம்மட வீதியில் நாம் விளையாண்ட நாட்களும் ...
அரட்டை அடித்த நாட்களும் ...
கடல் அலையில் உருண்டு பிரண்டு மணலில் விளையாடியதும் ...
பின் போட்டுக்கொள்ளும் சண்டைகளும் அதன் பின்னே வரும் சமாதானங்களும் சுகமானது அண்ணா ...

உனக்குள் இருக்கும் இறைவன்
உம்மை நன்றாக வழி நடாத்துவானாக ...
நேரங்கள் எல்லாம் நொடிகளாகட்டும் ...
நாம் காணுவதற்காக ...
வெற்றிகள் எல்லாம் படிகள் ஆகட்டும்
நீ ஏறுவதற்காக ...
வெண்பனி எல்லாம் நம் வாசல் வரட்டும்
நாம் பாதம் நனைக்க ...
நம் பாவம் கழுவ அல்லாஹ்வை நாடுவோம் ...
எல்லோருக்கும் இங்கே இல்லாமை விலகட்டும் ...
பொல்லாமை எல்லாம் ஒழியட்டும்...
எல்லா புகழும் இறைவனுக்கே ...
அல்ஹம்துலில்லாஹ் - (அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்)

இன்று தான் நீ பிறந்தாய்
இனிமையாய் நீ வளர்ந்தாய்
மகிழ்ச்சிகள் பூக்கட்டுமே எந்த நாளும்
வளர் பிறையாய் நீ வளர்வாய் ...
வான் மழையாய் ஆனந்தம் பொழியட்டும் உன் வாழ்வில் ...
தாய் சொல்லை கேட்டிடுவாய்
தரணி எங்கும் நீ ஆள்வாய் என் அண்ணா ...
தவறு செய்தால் தலையில் கொட்டி சொல்லிடுடா என் அண்ணா ...
டே அண்ணா பிறந்த நாள் வாழ்த்துகள் டா .....


வானத்து பிறையும் ...
கடல் அலையும் ...
பாதம் நனைக்கும் நீரும் ...
வான் மழையும் ...
வண்ண மலரும் ...
உன் சுவாசக்காற்றும் ...
உன்னை சுமக்கும் நிலமும் ...
எல்லை இன்றி என்னுடன் சொல்லும் அத்தேசத்திலும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ...

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (9-Aug-17, 4:14 pm)
Tanglish : unarvin mozhi
பார்வை : 2263

மேலே