பட்டதாாின் வாழ்கை

பட்டதாாின் வாழ்கை...

படிக்கும் வரை எங்களை போல் சந்தோஷமானவர்கள் இல்லை இறுதி ஆண்டின் கடைசி பரிட்சை முடிந்தும் ஆரம்பம் ஆகிறது எங்கள் வாழ்க்கை இல்லை இல்லை எங்கள் வாழ்கை எது என்று நாங்கள் தேடும் பருவம் ஆரம்பம் ஆகிறது இயந்திரவியல் படித்து பொறியாலன் என்ற பட்டம் பெற்று Er என பெயருக்கு முன்னாலும் B.e என பெயருக்கு பின்னாலும் மட்டும் போட்டு கொண்டு எது வாழ்கை என அறியாமல
சென்னை வந்த உடனே வேலை கிடைக்கும் என ஒரு மாதம் சொந்த ஊரில் இஞ்சினியர் என்ற பெருமையுடன் சுற்றி கொண்டு இருந்தேன் அறியாமல்.....

சென்னை வந்து சந்தித்த மிக பெரிய சவால் நகர பேருந்துகள் தான் ஸ்ரீபெரும்புதூர் பஸ்ல ஏறி தொழிற்பேட்டைபோ நிறைய கம்பேனி இருக்குனு ஈசியா சொல்லிட்டாங்க. பஸ் ஸாடப் போன ரோடுக்கு இடது புறத்துளையும் ஸ்ரீபெரும்பத்தூர் டூ டீநகர் னு பஸ் வருது எதிரே அதே போர்டு பஸ் வருது அப்போ ஒரு பயம் இது என்ன ஊருடானு வேலை தேடும் போது முதல் ஒரு மாதம் ஜாலியா தான் போகும் அப்பா குடுத்து விட்ட பணம் இருக்குறதால ஆனால் அடுத்து வரும் மாதங்கள் பசியோடும் பட்டினியோடும் தான் போகும். கல்லூரி படிக்கும் போது தினசரி அப்பா கிட்ட ஐம்பது ,நூறு வாங்கி செலவு பண்ணாலும் இங்க வந்து வேலை தேடி அலையும் போது அப்பாகிட்ட பணம் கேட்க தோனாது சென்னை வரும் போது அப்பாக்கு மாதம் பதினைந்தாயிரம் ரூபாய் அனுப்பனும்னு நினச்சிட்டு வந்துட்டு இப்பவும் அவங்கள தான் கஷ்டப்படுத்துரோமுன்னு நினைக்கும் போது பணம் கேட்க தோனாது அவங்களாகவே மூன்றாயிரம் ரூபாய் கேட்காமலே போட்டு விடுவாங்க அதுவும் தினமும் வேலை தேடி சுற்றும் போது பஸ்க்கு 50 ரூபாய் காலை சாப்பாடு கூழ் 10ரூபாய் பதினோறு மணிக்கு ஒரு டீ 8 ரூபாய, மதியம் குஸ்கா 25 ரூபாய் மாலை ஒரு டீ மூணு ரூபாய் பிஸ்கட் ஒன்னு இதுக்கே ஒரு மாசத்துக்கு சரியா இருக்கும் நைட் சாப்பாட்டை மறந்துறனும்.......

ஓவ்வொரு கம்பெனி வாசல போய் நிக்கும் போதும் உள்ள கூப்பிட்டு இன்டர்வியூ வச்சு நீ இதுக்கு சரிப்பட்டு வர மாட்டனு சொன்னா கூட பரவால சந்தோஷமா வெளிய வரலாம் இல்ல எனக்கு தகுதி இல்ல வேலை கிடைக்கலனா கூட பரவால ஆன கம்பெனி வாசல நிக்கும் போது பி.இ னு சொன்ன உடனே இங்க வேல கிடையாது போ போ னு நாய விரட்டுற மாதிரி விரட்டுறாங்க தினமும் தெருதெருவா சென்னை வெயில்ல .ஃபையிலயும் தூக்கிட்டு கிலோ மீட்டர் கணக்குல நடந்து பயங்கர மான வெறுப்பா வரும் அந்த வெறுப்பு யார் மேல ப்ரண்ட்ஸ் மேலயும் இல்ல அப்பா அம்மா சொந்தங்கள் மேலயா இல்ல வாழ்கை மேலயா இல்ல என் மேல எனக்கே வா இப்போ வரைக்கும் தெறியல ....வாழ்கை னா என்ன சொந்தங்கள் னா என்ன யாறு நமக்கு உண்மையான நண்பன் லவ் னா என்ன எல்லாம் வேலை தேடி சுத்தின அந்த நாலு மாசத்துல தெறிஞ்சிது..........
அப்புறம் யாரோ ஒருதங்க உதவி பண்ண அவங்க சொன்ன ஒரு வார்த்தைக்கு என்ன படிச்சு இருக்கீங்கனு என்னடா இது இன்டர்வியூ கூட வைக்காம ஒரு பெரிய கார் உதிரி பாகம் தயாரிக்கிற கம்பெனி வேலைக்கு போனேன் வேலை பார்த்தேனு சொல்லுறத விட ஒரு ரோபோ மாதிரி அங்க கொஞ்ச நாள் இருந்தேனு சொல்லாம் ஜாப் தூக்கி மிஷின்ல மாட்டனும் பச்சை கலர் பட்டன அழுத்தனும் இதுக்கு எதுக்குடா டிப்ளமோ & பி.இ படிச்சோம்னு தோனும் என்ன பண்ண பசி வேலை பாத்துதானே ஆகனும் எட்டு மணிநேரம் வேலை 8 மணிநேரம் OT மொத்தம் பதினாறு மணிநேரம் நிக்கனும் OT பாக்கமாட்டனு சொன்ன உடனே இன்ஞினியரிங் படிச்ச பசங்க இப்படி தான் பேசுவாங்க வேலைய விட்டு போக சொல்லுனு சொல்லுவாங்க அதுக்கு பயந்து பாத்து தான் ஆகனும் என்னதான் வேல பாத்தாலும் கொஞ்ச நாள்ள அவனே போடானு சொல்லிருவாங்க..
நான் Production தான் போவேனு Mba ல கூட Production management எடுத்து படிச்சிட்டு இருக்கேன்.B.e ஏ இன்னும் வேலை இல்லை இதுல Mba னு எல்லோரும் கிண்டல் பண்ணாக எண்ணைகாவது என் வாழ்கை யும் மாறாதானு நம்பிக்கைல இருக்கேன் B.e முடிச்சு மூனு வருஷம் ஆகிடுச்சு இப்போதான் ஏதோ எனக்கு பிடிச்ச மாதிரி நல்ல வேலை நல்ல பதவில நல்ல சம்பளம்ல கிடைச்சுருக்கு இனியாச்சும் வாழ்கை மாறுதானு பாப்போம்..!!!!!

எழுதியவர் : நாகா (9-Aug-17, 11:00 pm)
சேர்த்தது : நாகராஜன்
பார்வை : 254

சிறந்த கட்டுரைகள்

மேலே