இயற்கையின் சுய மரணம்

இன்று மரங்களின் மாநாடு,

தலைவரும், பொருளாளரும் மட்டுமே வந்துள்ளனர். தலைவர் பொருளாளிரிடம் கேட்கிறார்,

எங்கே அனைவரும், நாம் இருவர் மட்டும் வந்துள்ளோம்?

தலைவரே ஏற்கனவே நாம் கொஞ்சம் கொஞ்சமாக நம் கூட்டத்தினரை இழந்து வருகிறோம், இப்போது யாரும் வரவில்லை என்றால், அனைவரும் மனிதர்களால் வெட்ட பட்டுவிட்டனர் என்று நினைக்கிறேன்.

என்ன சொல்கிறாய், இன்னும் இந்த மனிதர்கள் திருந்தவில்லையா?

நம்மை அழித்ததால் ஏட்பட்ட வறட்சியும், வெள்ளமும் இன்றும் அவர்கள் உணரவில்லையா?

பொருளாளரே நான் சொல்வதை கேள், இனி நாமும் பொறுக்க வேண்டாம், நம்மையும் அவர்கள் அளித்து விடுவார்கள் அதற்கு முன்பு நாமே சுய மரணம் அடைவோம்.

இனி அவர்களே அந்த விண்ணுலகத்திட்கு பதில் சொல்லட்டும், இனி என்றும் நாம் அவர்களுக்கு தேவையில்லை.

"படர்ந்து விரிந்து அனைத்தையும் தடுத்து உங்களை நாங்கள் காத்தோம், பறக்கும் பறவைகள் கூட எங்கள் கைகளில் அமர நீங்கள் விடவில்லை. விண்ணும் நாங்கள் சொல்வதை கேட்டது, ஆனால் இன்றோ நாங்கள் இல்லை. இனி நீங்கள் விண் சொல்வதை மட்டும் கேட்பீர்கள், பின் நீங்களும் இல்லாமல் போவீர்கள்".

தங்களின் வேர்களை நீரை சுவாசிக்கவிடாமல் இரு மரங்களும் பட்டு போய் சுய மரணம் அடைந்தது.

எழுதியவர் : (10-Aug-17, 3:43 pm)
சேர்த்தது : Selvakumar
பார்வை : 472

மேலே