மனம்

ஒவ்வொரு உயிர்த்துகளும் சேர்ந்த அணுவானேன் உன்னாலே ...
கண்களின் ஓரம் கண்ணீர் துளியானேன் உன் வலிகளிலே ...
நெஞ்சம் நெகிழும் மகிழ்ச்சியின் உருவானேன் உன் முகத்தினிலே ...

உன்னாலே நான் உருவானேன் ...
உனக்குள்ளே நான் வாழ்கிறேன் ...
உந்தன் நொடி எம்மை நினைத்தே துடிக்கின்றது ...
எந்தன் தாயே நொடி எல்லாம் நீ தந்தது ...

தந்தையும் தாயும் ஓர் உயிர் ...
எம்மை படைத்திட்ட எந்தன் உயிர் ...
இருவரின் உடல் தான் வேறு
உள்ளம் நினைப்பது என்றும் ஒன்றே ...
எமக்கு எப்பொழுதும் நினைக்கும் நன்றே ...

நாட்கள் நகர்கின்ற வேளையில்
முகம் சுருங்கி உருமாறினாலும்
என் அகம் என்றும் மாறாது தாயே ...
நான் என்றும் உன் பிள்ளை அல்லவா .....

~ எம் தாய் தந்தையே உங்கள் மகள் பிரபாவதி விஜயலக்ஷ்மி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (12-Aug-17, 7:57 am)
Tanglish : manam
பார்வை : 397

மேலே